மறக்காம வந்துடனும்! சமந்தாவுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்!

சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி திருமண ஏற்பாடுகள் நாளுக்கு நாள் வேகமாக நடைபெற்று வருகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கும் அவரது காதலர் நிக்கோலாய் சச்தேவுக்கும் இருவருக்கும் நிச்யதார்த்தம் நடைபெற்றது. மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்திருந்த சரத்குமார் குடும்பம், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட கையுடன் தீவிரமாக திரைப்பிரபலங்களையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வருகின்றனர்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த 2012ம் ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து போடா போடி என்ற படத்தின் மூலம் தழிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். வரலட்சுமி சரத்குமாருக்கு சிறுவயதில் இருந்தே நடிக்கும் ஆர்வம் இருந்த போதிலும் அவருடைய அப்பாவான நடிகர் சரத்குமார் அனுமதிக்காத காரணத்தால் நடிக்காமல் இருந்ததால் ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.

Varalakshmi Sarathkumar Samantha Sarathkumar Rathika

மாஸான வில்லி: போடா போடி படம் வெளியாகி சிறிய இடைவெளிக்கு பின்னர், பாலா இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாரை தப்பட்டை படம் இவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மையில் கல் என்றே கூறவேண்டும். இந்த படத்திற்கு பின்னர் வரலட்சுமி சரத்குமார் சினிமா வட்டாரத்தில் இருக்கும் மற்ற நடிகைகளைப் போல் இல்லை, இவர் ஒரு கதாபாத்திரத்திற்காக பெரும் சிரத்தை எடுப்பார் என பலருக்கு புரியவைத்தார். தொடர்ந்து விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக இவர் வில்லி கதாபாத்திரங்களில் சிறப்பாகவே நடித்து வருகின்றார். படையப்பா படத்தை ரீ மேக் செய்தால் அதில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க சரியான தேர்வு என்றெல்லாம் கூட விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Varalakshmi Sarathkumar Samantha Sarathkumar Rathika

வரலட்சுமியின் காதலர்: மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கடந்த 14 ஆண்டுகளாக வரலட்சுமி காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனிடையே இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை இருக்கும் சச்தேவை வரலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளார்.

Varalakshmi Sarathkumar Samantha Sarathkumar Rathika

சமந்தாவுக்கு அழைப்பு: ஏற்கனவே நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கிய சரத்குடும்பம், சில தினங்களுக்கு முன்னர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியது. இந்நிலையில் சமந்தாவுக்கும் அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதேநேரத்தில் வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் தாய்லாந்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X