வர்ஷா பொல்லம்மாவுக்கு ஸ்கூல் டேஸ் க்ரஷ் யார் தெரியுமா... போட்டோவ போட்டே சொல்லிட்டாங்கப்பா!

சென்னை: நடிகை வர்ஷா பொல்லம்மா தனது பள்ளிப் பருவ க்ரஷ் குறித்து மனம் திறந்திருக்கிறார்.

Recommended Video

Celebrities Tamil New Year | Vishu Ashamsakal | Lock Down diaries

கர்நாடகா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் வர்ஷா பொல்லம்மா. 2015ஆம் ஆண்டு வெளியான சதுரன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து வெற்றிவேல், இவன் யார் என்று தெரிகிறதா, யானும் தீயவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மலையாள படங்களிலும் அடுத்தடுத்து கமிட்டானார் வர்ஷா பொல்லம்மா.

மாஸ்டர் படம்

மாஸ்டர் படம்

பல படங்களில் நடித்த போதும் வர்ஷா பொல்லாம்மா 96 என்ற படத்தின் மூலம்தான் பிரபலமானார். 96 படத்தில் விஜய் சேதுபதியில் ஸ்டூடன்ட்டாக நடித்திருப்பார் வர்ஷா. இதனை தொடர்நத் சீமத்துரை, பெட்டிக்கடை ஆகிய படங்களில் நடித்த வர்ஷாவுக்கு ஜாக்பாட்டாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார் வர்ஷா. தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். எப்போதும் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக உள்ளார் வர்ஷா பொல்லம்மா. தொடர்ந்து தனது போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்து வருகிறார் வர்ஷா.

விராட் கோஹ்லி

இந்நிலையில் நடிகை வர்ஷா பொல்லம்மா, தனது பள்ளப்பருவ க்ரஷ் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதாவது, விராட் கோஹ்லி மீது பள்ளி பருவத்தில் பெரிய ஈர்ப்பு இருந்தது. விராட் கோஹ்லிக்காக நான் ஒரு ஜெர்ஸியை டிசைன் செய்தேன். இப்போது அதனை கண்டுபிடித்து இருக்கிறேன்.. லாக்டவுனுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

பேப்பர் கட்டிங்

மேலும் விராட் கோலிக்காக் அவர் வரைந்த ஜெர்ஸியையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் கோஹ்லி யூ ராக் என்றும் இந்தியா லவ் யூ என்றும் எழுதியுள்ளார். மற்றொரு குட்டி ஜெர்ஸியில், கோஹ்லி ராக்ஸ் என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து விராட் கோஹ்லி குறித்த பேப்பர் கட்டிங் ஒன்றையும் ஷேர் செய்திருக்கிறார் வர்ஷா.

என்ன ஸ்கெட்சா?

மேலும் பிகில் படத்தில் ஜெர்ஸி அணிந்திருக்கும் போட்டோவை ஷேர் செய்திருக்கும் வர்ஷா, இதுதான் என் ஜெர்ஸி நம்பருக்கு பின்னால் உள்ள கதை என்று கூறியிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ஸ்கெட்சா என கேட்டு அனுஷ்கா ஷர்மா என குறிப்பிட்டு அவர் மிரட்டுவது போன்ற மீம்ஸை ஷேர் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X