குட்டியான டவுசரில் தொடை தெரியும் படி.. குத்தாட்டம் போட்ட நடிகை!

மும்பை : பால் போல முகமும் பற்றவைக்கும் அழகும் கொண்டு திரைப்படங்களின் மூலம் நம் அனைவரையும் ரசிக்க வைத்து வரும் நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இப்போதுள்ள லாக்டவுன் சூழலில் இவர் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இதில் உலகளவில் மிகவும் பிரபலமான டாக்கி டாக்கி என்ற பாடலுக்கு வேதிகா தற்போது குட்டி டவுசருடன் நடனமாடி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

வாய்ப்பு அளிக்காமல்

வாய்ப்பு அளிக்காமல்

தமிழ் திரைப்படத்துறை அவ்வப்போது சில திறமையான நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு அளிக்காமல் ஒதுக்கி வைத்து விடுகிறது. இவ்வாறு பல்வேறு திறமைகள் இருந்தும் தற்போது ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் நடிகை வேதிகா.

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

தமிழில் நடிகர் அர்ஜுன் எழுதி இயக்கி நடித்திருந்த மதராஸி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை வேதிகா, பின் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் மூலம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர்.

அனைத்து மொழி

அனைத்து மொழி

முனி படத்தில் இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்து நடித்த அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் கொடியை நாட்டி வந்தார்.

பலரையும் உற்றுநோக்க

பலரையும் உற்றுநோக்க

காளை, சக்கரக்கட்டி போன்ற காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்தவருக்கு நடிப்பிற்கு தீனி போடும் விதமாக இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்து இந்திய அளவில் பலரையும் உற்றுநோக்க வைத்தார்.

ஹீரோயின் இமேஜ்

ஹீரோயின் இமேஜ்

வேதிகாவை பலபலவென பார்த்து வந்த நமக்கு முதல் முறையாக பரதேசி படத்தில் இவரை பார்த்த உடனே பரிதாபமாக தோன்றியது. இவ்வாறு தனது ஹீரோயின் இமேஜ் எல்லாம் பற்றி கவலைப்படாமல் பரதேசி படத்தில் நடித்திருந்த வேதிகாவிற்கு பல பாராட்டுகளும் பல்வேறு விருதுகளும் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

அங்கீகாரம் கிடைத்தது

அங்கீகாரம் கிடைத்தது

இப்படத்தை தொடர்ந்து காவிய தலைவனிலும் வேதிகாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்ட நிலையில் அதற்கு பின் இவர் நடித்த எந்த ஒரு படங்களும் இவருக்கு சரிவர அமையவில்லை. இவ்வாறு இவரின் நடிப்பு திறமைக்கு ஓரிரு படங்களில் மட்டுமே அங்கீகாரம் கிடைத்தது என்றாலும் அதில் தனது முழுமையான ஒத்துழைப்பையும் திறமையையும் காட்டி நம் அனைவரையும் ரசிக்க வைத்திருந்தார்.

லாக்டவுன் காரணமாக

லாக்டவுன் காரணமாக

சமீபத்தில் இவர் தெலுங்கில் நடித்து வெளியான ரூலர் படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்தப்படம் வேதிகாவுக்கு கைகொடுக்கவில்லை. எனவே தற்போது தமிழில் நடிகர் பிரபுதேவா தயாரிப்பில் வளர்ந்து வரும் நாயகன் வருண் உடன் இணைந்து நடித்து வரும் வினோதன் திரைப்படத்தில் இப்போது நடித்து வரும் வேலையில் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருந்து வருகிறார்.

செமையாக டான்ஸ்

செமையாக டான்ஸ்

தனது கொஞ்சும் அழகின் மூலம் நம் அனைவரின் நெஞ்சங்களையும் வசீகரிக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நடிகை வேதிகா தற்பொழுது செமையாக டான்ஸ் ஆடி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மிகப் பிரமாதமாக

மிகப் பிரமாதமாக

ஒரு குட்டி டவுசர் அணிந்து கொண்டு ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான டாக்கி டாக்கி என்ற பாடலுக்கு மிகப் பிரமாதமாக டான்ஸ் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். இந்த அற்புதமான நடனத்தைப் பார்த்த ஒரு தமிழ் ரசிகர் உங்களின் பழைய படங்களுக்கு நான் மிகப்பெரிய ஃபேன் இன்னும் அந்த அழகு உங்களை விட்டு போகவில்லை என வர்ணித்து கூறியிருந்த அந்த தீவிர ரசிகருக்கு வேதிகா கையெடுத்து கும்பிட்டு நன்றியை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X