சொக்கிப்போன ரசிகர்கள்! என்னங்க வேதிகா இந்த குத்து குத்துறாங்க! தீயாய் பரவும் வீடியோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் அடையாளமாக உள்ளார். தென்னிந்தியாவில் நடன இயக்குநராக, நடிகராக ஜொலித்து வந்த பிரபு தேவா, ஒருகட்டத்திற்கு மேல் இந்தி சினிமாவுக்குச் சென்று அங்கும் நடன இயக்கத்தில் கோலோச்சி வருகின்றார். இதுமட்டும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படங்கள் இயக்கவும் செய்கின்றார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட ராப். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. படத்தில் நடித்துள்ள கதாநாயகி வேதிகா படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரபுதேவா தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட ராப். இந்த படத்தில் வேதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சன்னி லியோனும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை எஸ்.ஜே. சினு இயக்கியுள்ளார்.

Vedhika Dance Petta Rap Prabhu Deva

பேட்ட ராப்: இந்த படம் முழுக்க முழுக்க நடனம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ளதால் இந்த படம் பெரும்பாலான மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும் என படக்குழு நம்புகின்றது. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. ஏற்கனவே சிலம்பாட்டம் படத்தில் இடம்பெற்ற நலம்தானா பாடலின் ரீமேக்கில் சிம்புவுக்கு இணையாக வேதிகா தனது அசாத்திய நடனத்திறமையை வெளிப்படுத்தியிருப்பார். இதனால் பிரபுதேவாவுக்கு இணையாக வேதிகா எந்த அளவுக்கு ஆடப்போகின்றார் என்ற கேள்வியும் இருந்து வந்தது.

டீசர் வெளியீடு: இந்நிலையில் ஜூன் 22ஆம் தேதியே படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். டீசரில் பிரபுதேவாவுடன் நடனமாட, நடனக் கலைஞர்களுக்கு இடையில் நடக்கும் போட்டிபோல் உள்ளது. மேலும் படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. பிரபுதேவா வேதிகாவுடன் நடனப் பயிற்சியில் ஈடுபடுவதைப் போலவும், சன்னிலியோனுடன் ஒரு ஐட்டம் டேன்ஸ் ஆடுவதைப் போலவும் காட்டப்பட்டுள்ளது. டீசரைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு பக்கா கமர்ஷியல் பொழுதுபோக்குப் படமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். வேதிகா நடிப்பில் வெளியான வெப் சீரீஸான யாஷினி நல்ல வரவேற்பைப் பெற்றது.

டான்ஸ் வீடியோ: இந்நிலையில் முழுக்க முழுக்க நடனத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் வேதிகா அனைவரையும் வியக்க வைக்கும் அளவிற்கு நடனம் ஆடியுள்ளர் என கூறப்படுகின்றது. இதனை உறுதிப் படுத்தும் விதமாக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சாலையில், நடிகை வேதிகா பிரபல அமெரிக்க யூட்டூப்பர் மற்றும் டி.ஜே. மேட் ஸ்டீஃப் ஃபினினாவுடன் காட்டுக் குத்து குத்துகின்றார். குறிப்பாக வேதிகாவின் நடனத்தைப் பார்க்கும்போது நமக்கே மூச்சு வாங்கும் அளவிற்கு ஆடுகின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X