மணப்பெண் கோலத்தில் பரதேசி ஹீரோயின்... தேவதை மாதிரியே இருக்காங்க!

மும்பை : இயக்குனர் பாலாவின் பரதேசி திரைப்படத்தில் ஈடுஇணையற்ற நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை வேதிகா.

தென்னிந்திய படங்களில் இதுவரை கலக்கிக் கொண்டிருந்த இவர் தி பாடி படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்துள்ளார்.

தமிழில் அடுத்தடுத்து மூன்று படங்கள் இவருக்கு வெளியாக இருக்க இப்பொழுது மணப்பெண் கோலத்தில் பார்க்க தேவதை போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை லட்சக்கணக்கில் அள்ளி வருகிறார்.

திருப்புமுனையை ஏற்படுத்தியது

திருப்புமுனையை ஏற்படுத்தியது

க்யூட்டான நடிகைதான் என்றபோதிலும் அசால்டாக சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சிறந்த நடிகையாக தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும் வேதிகா மதராஸி படத்தின் மூலம் அறிமுகமாகி முனி இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிலையை கூட நடிக்க வைக்கும் திறமை கொண்ட இயக்குனர் பாலாவின் திரைப்படங்களுக்கு இந்திய அளவில் பெரும் வரவேற்பு இருக்க பரதேசி படத்தில் நடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

சாதனை படைத்தது

சாதனை படைத்தது

பல திரைப்படங்களில் ஆடிப் பாடி அனைவரையும் மகிழ்வித்த வேதிகா பரதேசி திரைப்படத்தில் அங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியது அனைவரது பாராட்டுக்களையும் பெற்றதோடு சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார். தொடர்ந்து இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றிக்கு மேல் வெற்றியாக அமைய மீண்டும் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து காஞ்சனா 3 படத்தில் நடித்து பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தார். அந்த படம் 2019ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த அதை படமாக சாதனை படைத்தது.

பாலிவுட்டில் அறிமுகமானார்

பாலிவுட்டில் அறிமுகமானார்

தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என இதுவரை தென்னிந்தியாவில் கலக்கிக் கொண்டிருந்த வேதிகா பாலிவுட்டில் தி பாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் இவருக்கு தமிழில் வினோதன், ஜங்கிள் போன்ற படங்கள் கைவசம் உள்ளன.

தேவதை போல

தேவதை போல

இதுவரை திரைப்படங்களில் காட்டாத அளவுக்கு படுகவர்ச்சியாக சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து லைக்குகளை குவித்து வைரலாகி வர அவ்வப்போது க்யூட்டான புகைப்படங்களையும் பதிவிட்டு பாராட்டுகளை பெற்று வருகிறார். அந்த வகையில் இப்பொழுது கிறிஸ்துவ மணப்பெண் கோலத்தில் வெள்ளை உடையில் பார்க்க தேவதை போல கொள்ளை அழகில் மிளிரும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்படுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X