ரொம்ப உரசாதிங்க .. பக்குனு பத்திக்கப்போகுது.. வேதிகாவின் வெறலெவல் போட்டோஷூட்!

மும்பை : மொரிசியசுக்கு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் பழைய பீரங்கியின் மீது ஒய்யாரமாக படுத்துக்கொண்டு கவர்ச்சி உடையில் கண்டமேனிக்கு போஸ் கொடுத்துள்ளார் நடிகை வேதிகா.

தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் வேதிகா தனது அதீத அழகின் மூலம் பல கோடி ரசிகர்களை கொண்டு வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது பழைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் இந்த லாக்டவுனில் பதிவிட்டு வரும் வேளையில் நடிகை வேதிகா தற்போது படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் எடுத்த குறும்புத்தனமான போட்டோஷூட் வீடியோ ஒன்றை பதிவேற்றியது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

ஹிந்தியில் ரீமேக்

ஹிந்தியில் ரீமேக்

கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான "தி பாடி" திரைப்படம் சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் காட்சிகளால் உருவாக்கப்பட்டிருந்த நிலையில் இந்த திரைப்படம் அங்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது, அவ்வாறு ஸ்பானிஷ் மொழியில் வெளியாகி வெற்றியடைந்த இந்த திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது.

முதல்வன் படத்திற்கு பிறகு

முதல்வன் படத்திற்கு பிறகு

ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் 2016ஆம் ஆண்டு கன்னடம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒருசேர உருவான "ஒரு மெல்லிய கோடு" திரைப்படமும் "தி பாடி" என்ற திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது தான். அர்ஜுன் மற்றும் மனிஷா கொய்ராலா முதல்வன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த "ஒரு மெல்லிய கோடு" திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்க்க தவறிய நிலையில் தற்பொழுது "டி பாடி" கடந்த 2019ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சாவகாசமாக சாய்ந்து

சாவகாசமாக சாய்ந்து

இம்ரான் ஹஷின், ரிஷி கபூர் மற்றும் வேதிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படத்தின் காட்சிகள் பல்வேறு நாடுகளில் படம் பிடிக்கப்பட்ட நிலையில், மொரீசியசில் உள்ள ஒரு அழகான இடத்திலும் இந்த படத்திற்கான ஒருசில காட்சிகள் படமாக்கப்பட்டது. அவ்வாறு மொரீசியசில் படப்பிடிப்பு நடந்தபோது நடிகை வேதிகா அங்கு இருந்த பழமைவாய்ந்த பீரங்கி ஒன்றின்மீது சாவகாசமாக சாய்ந்து படுத்துக் கொண்டு போட்டோ ஷூட் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பீரங்கியின் மீது உரசி

பீரங்கியின் மீது உரசி

விதவிதமான போட்டோக்களையும், கண்கவர் நடனமாடிய வீடியோக்களையும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள வேதிகா, கொள்ளைகொள்ளும் கவர்ச்சியில் முட்டி வரை உள்ள குட்டி பாவாடை அணிந்தவாறு தனது பளபள கால்கள் தெரிய, பீரங்கியின் மீது உரசி உரசி உட்கார்ந்துகொண்டும், ஒய்யாரமாக படுத்துக் கொண்டும் கடற்கரை ஓரத்தில் காற்று வீச கவர்ச்சியுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த போட்டோஷூட் வீடியோவை வேதிகா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து பலராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

மோசமான உருவமடா சாமி

மோசமான உருவமடா சாமி

இந்த அழகிய வீடியோவை பார்த்த வேதிகாவின் ரசிகர்கள் பலரும் வேதிகாவின் அழகையும், வித்தியாசமாக போட்டோ ஷூட் எடுத்த விதத்தையும் புகழ்ந்து தள்ளியவாறு, "பீரங்கிய ரொம்ப உரசாதிங்க பத்திக்க போகுது" எனவும் " ரொம்ப மோசமான உருவமடா சாமி" எனவும் வித்தியாசமான வகையில் வேதிகாவை சிலர் புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X