நடுக்கடலில் கடல்கன்னி போல போஸ் கொடுக்கும் வேதிகா!
சென்னை : நாகார்ஜுனா மற்றும் அவரது மகன் நாக சைதன்யா மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை வேதிகா.
வேதிகா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி உள்ள ஜங்கிள் திரைப்படம் மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது.
சில திரைப்படங்களில் மட்டுமே வேதிகா நடித்து வந்தாலும் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் வேதிகா நடு கடலில் கடல்கன்னி போல நின்று போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகிறது.

மகன் நாக சைதன்யாவுடன் இணைந்து
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ளார் நாகார்ஜுனன். அவரது மகன் நாக சைதன்யாவும் தெலுங்கு சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். இருவரும் இணைந்து ஏற்கனவே சில திரைப்படங்கள் நடித்துள்ளனர். இப்பொழுது இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் உப்பண்ணா புகழ் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்த வேதிகா முக்கிய வேடத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பரதேசியில் முற்றிலும் வித்தியாசமான ரோலில்
முனி வெற்றிக்கு பிறகு அதன் தொடர்ச்சியாக வெளியான காஞ்சனா பாகங்களும் வெற்றி பெற்று வருகிறது. காஞ்சனா 3ல் ராகவா லாரன்ஸ் உடன் மீண்டும் ஜோடி சேர்ந்து டூயட் போட்டார் வேதிகா. பல படங்களில் க்யூட்டான கதாநாயகியாக வந்து சென்றவர் பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசியில் முற்றிலும் வித்தியாசமான ரோலில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

நல்ல பட வாய்ப்புகள் கிடைக்காததால்
இன்றுவரை வேதிகாவின் திரைவாழ்க்கையில் பரதேசி மிகப்பெரிய மைல்கல்லாக இருந்து வருகிறது. மிகச் சிறந்த நடிகையாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் ஒரு சில படங்களில் மட்டுமே கைவசம் நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் நாகர்ஜுனா இணைந்து நடிக்கும் பங்காருராஜா திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Recommended Video

நடுக்கடலில் நீச்சல் உடையில் கடல்கன்னி போலவே
விறுவிறுப்பான திரில்லர் கதை களத்தில் ஹாரர் படமாக உருவாகியுள்ள ஜங்கிள் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மொத்த படப்பிடிப்பும் முடிந்து ரிலீசுக்குத் தயாராக உள்ள படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் வேதிகா இப்படத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடுக்கடலில் நீச்சல் உடையில் நின்றுகொண்டு பார்ப்பதற்கு கடல்கன்னி போலவே காட்சியளிக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











