எல்லாம் என் துரதிர்ஷ்டம்… நடிகை வேதிகா வேதனை.. ஏன் என்ன ஆச்சு பதறிய ரசிகர்கள் !

சென்னை : நடிகை வேதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை வேதிகா.

ராகவா லாரன்ஸ் நடித்த முனி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த வேதிகா, பரதேசி, காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களுக்காக பல விருதுகளை வாங்கியவர் நடிகை வேதிகா.

நடிகை வேதிகா

நடிகை வேதிகா

ஸ்லிம் பியூட்டி என ரசிகர்களால் உருகி உருகி ரசிக்கப்பட்டவர் நடிகை வேதிகா. முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை தட்டிச் சென்ற பரதேசியில் அங்கம்மா என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய வேதிகா அடுத்த ஆண்டே வசந்தபாலனின் காவியத்தலைவன் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்

அதிக வசூலை வாரி குவித்த காஞ்சனா 3ல் ராகவா லாரன்சுடன் இரண்டாவது முறையாக ஜோடி போட்டு நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், வேதிகாவுக்கு படவாய்ப்பு இல்லாததால் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை வேதிகா இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை வைத்துள்ளார்.

ட்விட்டர் பதிவு

ட்விட்டர் பதிவு

இந்நிலையில் வேதிகா, தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், கடந்த இரண்டு நாட்களாக தனக்கு அதிக காய்ச்சல் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், அனைவரும் வெளியில் செல்லும் முன் முகக்கவசத்தை கட்டாயம் அணிந்து செல்லுமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

துரதிர்ஷ்டவசமாக

துரதிர்ஷ்டவசமாக

துரதிர்ஷ்டவசமாக நான் முதல் முறையாக கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எல்லா மக்களும் லேசான அறிகுறிகளை எதிர்கொள்வதில்லை. எனக்கு அதிக காய்ச்சல் இருந்தது. மேலும், கடுமையான உடல்வலி மற்றும் அதிக காய்ச்சல் 103 Fக்கு மேல் இருக்கிறது. ஒரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு விட்டால் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படாதென்று கூறுவதை யாரும் நம்ப வேண்டாம். அனைவரும் கவனத்துடன் இருங்கள் என்று கூறியுள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா

அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் 306 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X