பிகினி புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி கிளப்பிய வேதிகா.. என்ன இப்படி இறங்கிட்டாங்க!
சென்னை : நடிகை வேதிகா முனி, பரதேசி, காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
தற்போது வினோதன், ஜங்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார்.
சோஷியல் மீடியாவிலும் இவர் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தற்போது மாலத்தீவில் இவர் சுற்றுலாவில் உள்ளார்.

நடிகை வேதிகா
நடிகை வேதிகா முனி படத்தில் ராகவா லாரன்சுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு சிறப்பான என்ட்ரியாக அமைந்தது. ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு வாய்ப்புகள் கோலிவுட்டில் அமையவில்லை. தொடர்ந்து பரதேசி, காஞ்சனா 3 படங்களில் இவரை பார்க்க முடிந்தது.

வேதிகா கைவசம் 5 படங்கள்
கடந்த 2006ம் ஆண்டிலிருந்து நடித்துவரும் வேதிகா தற்போது வினோதன், ஜங்கிள் உள்ளிட்ட 5 படங்களை கையில் வைத்துள்ளார். தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் இவரை மிகவும் ஆக்டிவாக பார்க்க முடிகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் வேதிகா. இவரை இன்ஸ்டாகிராமில் 34 லட்சம் பேர் தொடர்ந்து வருகின்றனர். அவ்வப்போது கவர்ச்சிப் புகைப்படங்களை இவர் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். குறிப்பாக பிகினி படங்களையும் அவர் வெளியிட்டு அதிரடி கிளப்பி வருகிறார்.

பிகினி போட்டோஷுட்
இந்நிலையில் மாலத்தீவில் தற்போது சுற்றுலாவில் இவர் உள்ளார். இதனிடையே, தற்போது இவர் வெளியிட்டுள்ள கடலுக்கு நடுவில் பிகினியுடன் போட்டோஷுட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

கவர்ச்சிப் புகைப்படங்கள்
சிம்பு, லாரன்ஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள வேதிகா, தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக இத்தகைய கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன்மூலம் பட வாய்ப்புகளை பெறவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமீப காலங்களில் மாலத்தீவிற்கு செல்லும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

பிகினி புகைப்படங்கள்
சமீபத்தில் நடிகை ஜெயபாரதியும் இதுபோல மாலத்தீவிற்கு சென்று அங்கிருந்து பிகினி உடையுடன் போட்டோஷுட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி கிளப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அந்த வகையில் வேதிகாவும் தற்போது அந்த வரிசையில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











