ஆல்கஹாலை கட் செய்ய சொன்ன மருத்துவர்.. மது பாட்டிலுடன் வேதிகா செஞ்ச வேலையை பாருங்க!

சென்னை : நடிகை வேதிகா முனி, காளை, பரதேசி, காவியத்தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் தேர்ந்தெடுத்தப் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு அதிகமான வாய்ப்புகள் இல்லை.

இதையடுத்து மற்ற மொழிப்படங்களில் நடித்துவருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார்.

வேதிகாவின் அடுத்தடுத்த இன்ஸ்டாகிராம் போட்டோஷுட்கள் மற்றும் அதன் புகைப்படங்களால் ஏராளமான பாலோயர்கள் இவருக்கு உள்ளனர்.

நடிகை வேதிகா

நடிகை வேதிகா

மாடலிங் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு பெற்றவர்களில் ஒருவர் வேதிகா. தமிழில் சில படங்களில் நடித்துள்ள வேதிகா, அடுத்தடுத்த மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் மிகுந்த ஆக்டிவாக, பட வாய்ப்புகளை ஈர்க்கும் வகையில் அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இங்கிலாந்தில் எம்பிஏ படிப்பை முடித்த வேதிகா, நல்ல கலர், ஸ்லிம்மான உடல்வாகு, சிறந்த நடிப்பு போன்ற திறமைகளை கொண்டுள்ள போதிலும் தனக்கான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.

தமிழில் வாய்ப்புகள்

தமிழில் வாய்ப்புகள்

தமிழில் முனி படத்தில் அறிமுகமான வேதிகா, தொடர்ந்து சக்கரக்கட்டி, காளை, மலை மலை போன்ற படங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகையாக உணர வைத்தார். ஆனால் இந்தப் படங்கள் இவருக்கான சிறந்த அங்கீகாரத்தை கொடுக்காத நிலையில், பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதில் அங்கம்மா என்ற வேதிகாவின் கேரக்டர் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது.

காவியத்தலைவனில் வேதிகா

காவியத்தலைவனில் வேதிகா

ஆனால் இந்தப் படமும் போதிய வரவேற்பை பெற்றுத்தராத நிலையில், காவியத்தலைவன் என்ற படத்தில் வடிவாம்பாள் என்ற கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்தப்படத்தில் நாடக கலைஞராக, சித்தார்த்தின் காதலியாக, பிரித்வியின் காதலுக்கு எதிரான போக்கையும் காண்பிக்கும் வகையில் சிறப்பான கேரக்டரை வெளிப்படுத்தியிருந்தார் வேதிகா. ஆனால் இந்தப் படமும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை.

பட வாய்ப்புகள் கிடைக்காத வேதிகா

பட வாய்ப்புகள் கிடைக்காத வேதிகா

இந்தப் படத்தை தொடர்ந்து லாரன்சின் காஞ்சனா 3 படத்தில் 3 நாயகிகளுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வேதிகாவிற்கு கிடைத்தது. இதில் வேதிகாவின் கேரக்டர் கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைந்தது. தொடர்ந்து பிரபுதேவாவுடன் விநோதன், ஜங்கிள் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் வேதிகா. ஆனாலும் அனைத்து திறமைகளும் இருந்தும் சிலருக்கு பட வாய்ப்புகள் சிறப்பாக அமையாது. அந்த ரகத்தில் வேதிகாவும் உள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

இதனிடையே சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் வேதிகா. கவர்ச்சி தூக்கலாக, பிகினி உள்ளிட்ட உடைகளிலும் வேதிகாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்க முடிகிறது. இந்நிலையில், இன்றைய தினம் தான் வெளியிட்டுள்ள ரீல்சில், தான் அரிதாகவே குடிப்பேன் என்ற கேப்ஷனுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். டாக்டர் தன்னை ஆல்ஹகாலை கட் செய்யுமாறு கூறியுள்ளதாகவும் அதனால் தான் கட் செய்வதாகவும் அந்த வீடியோவில் ஆல்கஹாலை கத்திரிக்கோல் கொண்டு கட் செய்கிறார் வேதிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X