கையில் துடைப்பம்… தலையில் முக்காடு.. வீட்டை சுத்தம் செய்யும் பிரபல நடிகை!

மும்பை : நடிகை வேதிகா கையில் துடைப்பத்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த ஊரடங்கில் என்ன செய்வது என்றே தெரியாத நமது ஹீரோ, ஹீரோயின்கள் தனது வீட்டு வேலைகளை தானாகவே செய்து வருகின்றனர் . பல நடிகைகள் வீட்டு வேலை செய்வது போன்ற பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளிவிட்டு கொண்டு இருக்கின்றனர்.

பாலிவுட் ,கோலிவுட் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைவரும் சேலஞ்சாக எடுத்து கொண்டு தனது வீட்டு வேலைகளை செய்து வருகின்றனர். நடிகைகளை விட நடிகர்களே இந்த பந்தயத்தில் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர் .

மதராஸி, முனி, காவிய தலைவன், பரதேசி போன்ற படங்களின் மூலம் தமிழக மக்களுக்கு தெரிய வந்தவர்தான் இந்த வெட்கப்படும் வெண்ணிலா வேதிகா. அனைவரும் அழகான புகைப்படங்களை இந்த லாக்டவுனில் பதிவிடும் வேளையில் இவர் பதிவிட்ட ஒரு போட்டோ நம்மை கலங்கடித்து இருக்கிறது.

 சூப்பர் கதைகள்

சூப்பர் கதைகள்

தமிழில் முனி, காளை, பரதேசி, காவியத்தலைவன் போன்ற படங்களின் மூலம் ரொம்ப பிரபலமானவர் நடிகை வேதிகா. இவர் தற்போது விநோதன் என்ற தமிழ் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். பார்க்க ரொம்பவும் லட்சனமாக இருக்கும் இவரை பரதேசி படத்தில் இப்படி பண்ணிட்டீங்களே என இயக்குனர் பாலாவை திட்டாத ஆட்களே கிடையாது. பின் வந்த காஞ்சனா 3ல் செம்ம கிளாமராக நடித்து இருப்பார். இதில் பரதேசி மற்றும் காவியத்தலைவன் போன்ற படங்களுக்கு நிறைய விருதுகளின் தனது நடிப்பிற்காக பெற்றுள்ளார்.

 கையில் துடைப்பம்

கையில் துடைப்பம்

இப்போது இருக்கும் சூழ்நிலையில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதனால் பலரும் அவர்கள் செய்யும் பல வேலைகளை சூப்பராக படம் பிடித்து அனைவருக்கும் சமூகவலைத்தங்கள் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை வேதிகா இப்போது ஒரு படத்தை பதிவிட்டு இருந்தார் அதில் யாரோ ஒருவர் தலையில் சேலையால் முக்காடு போட்டுக்கொண்டு வீட்டை பெருக்குவது போல இருந்தது சரி என்று கொஞ்சம் உற்று பார்த்தால் அட நம்ம வேதிகா.

 கிண்டலடிக்கும் ரசிகர்கள்

கிண்டலடிக்கும் ரசிகர்கள்

வேதிகாவா இது பாக்க இப்படி இருக்காங்க என அனைவரும் அதிர்ச்சி ஆழ்ந்துள்ளனர். அதை பார்த்த பலர் அவரை பாராட்டி வருகின்ற வேளையில் ஒருவர் இந்த குவாரன்டைன் ஒரு சூப்பர் ஹீரோயினை இப்படி வேலைக்காரியாக்கியுள்ளது என கிண்டலாக பேசியுள்ளார். இன்னும் சிலர் நீங்க இப்படி கடினமான வேலை செய்வது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என ரொம்பவும் பீல் பண்ணி இருக்கிறார். இன்னொருவர் எனக்கும் இந்த மாதிரி ஒரு இந்திய பெண் மனைவியாக வரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

 வேதனையில் ரசிகர்கள்

வேதனையில் ரசிகர்கள்

இந்த லாக்டவுனில் இப்படி பொறுப்புடன் வீட்டை சுத்தம் செய்வதை பாராட்டுவதா இல்லை. ஒருபிரபல நடிகைக்கு இந்த நிலைமையாக என நினைத்து வருத்தப்படுவதா என தெரியவில்லை என்று அவரது ரசிகர்கள் குழம்பி கிடக்கின்றனர். கையில் துடைப்பதுடன் இருக்கும் போட்டோவை பார்ப்பதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது என்று பல ரசிகர்கள் கூறியுள்ளனர்.

 பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

வேதிகா நடித்து இன்னும் மூன்று படங்கள் ரிலீஸிக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது. தமிழில் விநோதன், கன்னடத்தில் ஹோம் மினிஸ்டர். தமிழ் தெலுங்கில் ஒரு சேர தயாராகிவரும் ஜங்கில் போன்ற படங்கள் வரிசைகட்டி கொண்டு ரிலீஸிக்கு காத்து கிடக்கிறது. நமக்கு தெரிந்து நன்கு நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர் எந்த ரோல் குடுத்தாலும் அதில் கச்சிதமாக நடிக்க கூடியவர் வேதிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X