தங்க நிற மேனிக்கு மேலும் மெருகூட்டும்.. கோல்டன் வேதிகா!

சென்னை : கோல்டன் நிற ஆடையில் தேவதை போல இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் வேதிகா.

நடிகை வேதிகா கடைசியாக தமிழில் முனி 4 படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார். இவர் கடைசியாக தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ரூலர் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது .

 Actress vethika new photoshoots

தற்போது வேதிகா மிக அசத்தலான போட்டோசூட்டை நடத்தியிருக்கிறார் . இந்த போட்டோக்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மலைத்து போய் கமெண்ட் செய்தும் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.

new

இந்த போட்டோக்களில் கோல்டன் நிற ஆடையில் தேவதை போல இருக்கிறீர்கள் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் பெரிதாக முகபாவங்கள் இன்றி எதார்தமான பார்வையில் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து இருக்கிறார் வேதிகா .

 Actress vethika new photoshoots

வேதிகா இந்த போட்டோக்களை பதிவிட்டு முதலில் கமெண்ட் செய்யும் இரண்டில் இருந்து நான்கு ரசிகர்களுக்கு அவரே பதிலும் கொடுக்கிறார் . இப்படி முத்த ஸ்மைலிகளை போட்ட ஒரு பெண் ரசிகைக்கு முத்த ஸ்மைலியை பதிலாக அளித்து இருக்கிறார்.

நிறைய நடிகைகள் அதிகபடியான கமெண்டுகள் வருவதனால் கமெண்ட் பக்கங்கள் அருகே கூட செல்வதில்லை . ஆனால் வேதிகா முடிந்த அளவுக்கு அசத்தலான போட்டோக்களுடன் அன்பையும் பகிர்ந்து வருவது ரசிகர்களை உற்சாகமூட்டியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் முந்தி அடித்து கொண்டு முதல் கமெண்டில் இடம்பெற்றுவிட வேண்டும் என்று வேதிகாவின் பக்கத்திலே காத்திருக்கின்றனர்.

நடிகை வேதிகா அடுத்தாக தமிழில் வினோதன் படத்தில் நடித்து வருகிறார் பப்பி பட நாயகன் வருண் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை பிரபு தேவா தயாரித்து வருகிறார். அடுத்ததாக தமிழில் ஜங்கில் படத்திலும் கன்னடத்தில் ஹோம் மினிஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார் வேதிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X