Vichitra: மனசு நிறைஞ்சி இருக்கு.. மகனை நினைத்து பெருமைப்படும் விசித்ரா.. குவியும் வாழ்த்து!

சென்னை: 90களில் கவர்ச்சி நடிகையாகவும், காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை விசித்ரா. போர்க்கொடி படத்தில் அறிமுகம் ஆன இவர், இவர், தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கவர்ச்சி, காமெடி காட்சிகளில் கலக்கி வந்த நடிகை விசித்ரா, திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி, குடும்பம், பசங்க என்று மலேசியாவில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விதவிதமான சமையலை சமைத்து, ரசிகர்களின் பாராட்டை பெற்றார் விசித்ரா. அதன் பின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் இன்றைய தலைமுறையினருக்கும் தெரிந்த முகமாக மாறினார் விசித்ரா.

Vichitra photo
Photo Credit:

நடிகை விசித்ரா: பிக் பாஸ் நிகழ்ச்சியில், பல ஆண்டுகளாக மனதில் பூட்டி வைத்து இருந்த விஷயத்தை சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்த போது பிரபலமான நடிகர் ஒருவர் என்னிடம் பாலியல் ரீதியாக எல்லை மீறி நடந்து கொண்டார். அவர் என்னை ரொம்ப டார்ச்சர் செய்தார். இந்த ஒரு காரணத்தினாலேயே நான் சினிமாவை விட்டேன் என்றார். அப்போது நான் இதை சொல்லி இருந்தால் என் கரியரே காலி ஆகியிருக்கும். இப்போது சொல்ல முடிகிறது எனவும் விசித்ரா பேசி தெரிவித்தார்.

மனசு நிறைஞ்சி இருக்கு: சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோது திருமணமே வேண்டாம், சிங்கிளாகவே இருந்துவிடலாம் என்று நினைத்து இருந்த விசித்ரா, திருமணத்திற்கு பிறகு கணவருக்காகவும், குழந்தைகளுக்காகவும் சினிமாவை விட்டு விலகி 3 மகள்களையும் பொருப்போடு வளர்த்துள்ளார். தற்போது விசித்ராவின் மூத்த மகன் ரோகன் சாஜி MBA பட்டம் பெற்றுள்ளார். இந்த பட்டமளிப்பு விழா வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை விசித்ரா, சின்னஞ்சிறு அடிகளிலிருந்து பெரிய தாவல்கள் வரை... இன்று என் மகன் எம்பிஏ பட்டம் பெறுகிறான். பெருமையால் என் இதயம் நிரம்பி வழிகிறது என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த பலர் நடிகை விசித்ராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X