சமந்தா செய்திருப்பது தைரியமான விஷயம்.. மனம் திறந்து பாராட்டிய விசித்திரா
சென்னை: ஹேமா கமிட்டி அறிக்கைதான் இப்போது அனைத்து மொழி திரைத்துறையிலும் தலைப்பு செய்தியாக இருக்கிறது. பலரும் அதுகுறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள். அந்தவகையில் நடிகை விசித்திராவும் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருந்தார். இந்தச் சூழலில் அப்பேட்டியில் அவர் சமந்தா குறித்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
நடிகை விசித்திரா தலைவாசல் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். காமெடி மற்றும் கிளாமர் ரோல்களில் நடித்துவந்தார். ஆனால் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கி திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு பல வருடங்கள் ஒதுங்கியே இருந்த அவர் சில வருடங்களுக்கு முன்பிலிருந்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

பிக்பாஸ் 7: கடந்த வருடம் நடந்த பிக்பாஸ் ஏழாவது சீசனில் கலந்துகொண்டிருந்தார் விசித்திரா. அந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற பூகம்ப டாஸ்க்கில் விசித்திரா தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "தெலுங்கில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடித்தபோது அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொள்வதற்காக முதல் நாள் சென்றேன்.
ரூமுக்கு அழைத்தார்: ஆனால் அவரோ என் பெயரைக்கூட கேட்காமல் இன்னைக்கு நைட் என் ரூமுக்கு வந்துடு என்றார். நான் அன்றைய இரவு அவர் ரூமுக்கு செல்லாமல் என்னுடைய ரூமுக்கு வந்து தூங்கிவிட்டேன். அதற்கு பிறகு அவருடைய ஆட்கள் மது அருந்திவிட்டு வந்து எனது அறையை தட்டினார்கள். இதனை கவனித்துக்கொண்டிருந்த அந்த ஹோட்டலின் மேனேஜர் (தற்போது விசித்திராவின் கணவர்) எனக்கு உதவி செய்தார்.
கன்னத்தில் அறை: அதன்படி அவர் எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூமை ஒதுக்கிக்கொடுத்தார். அதனால் நான் எந்த ரூமில் இருக்கிறேன் என ஹீரோவுக்கும் அவருடைய ஆட்களுக்கும் தெரியவில்லை. இதுவும் ஹீரோவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அந்த சமயத்தில் ஆக்ஷன் காட்சி ஷூட் செய்யப்பட்டது. அந்த ஷூட்டிங்கில் சண்டை கலைஞர் ஒருவர் என்னை தவறான முறையில் தொட்டார். நான் சண்டை பயிற்சியாளரிடம் சென்றுமுறையிட்டேன். அவர் என்னை அறைந்துவிட்டார்" என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.
சமீபத்திய பேட்டி: விசித்திரா சொன்ன அந்த பெரிய ஹீரோ பாலகிருஷ்ணாதான் என்று பலரும் கூறினார்கள். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகவே ஹேமா கமிட்டி அறிக்கை பேசு பொருளாகியிருக்கிறது. இந்நிலையில் அதுகுறித்து விசித்திரா சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தெலுங்கில் அமைக்கப்பட்ட கமிட்டியும் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சமந்தா தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் தெலுங்கில் படுபிஸியான ஹீரோயினாக இருக்கும் அவர் இப்படி பதிவு செய்திருப்பது ஒரு தைரியமான விஷயம். தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திரைத்துறையைவிடவும் தெலுங்கு திரைத்துறைதான் அதிக அரசியல் கொண்டது. அங்கிருந்தும் அறிக்கை வெளியாவது கடினமான ஒன்று" என்றார்,.


Click it and Unblock the Notifications











