ரசிகர்களை வெறியேற்றும் வித்யாபாலன்.. “அழகியே“ என வர்ணிக்கும் ரசிகர்கள்!
மும்பை : இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யாபாலன் பல்வேறு திரைப்படங்களில் நடித்து, சிறந்த நடிகையாக பல விருதுகளுடன் இன்று வரை வெற்றி நாயகியாக கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Recommended Video
சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வித்யாபாலன் சமீபத்தில் சகுந்தலா தேவி எனும் சுயசரிதை திரைப்படத்தில் கணித மேதையாக நடித்து அனைவரையும் வியப்படைய வைத்துள்ளார்.
இவ்வாறு அனைவரும் வித்யாபாலன் நடிப்பில் வெளியான சகுந்தலாதேவி திரைப்படத்தைப் பற்றி பாராட்டி வரும் நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரையும் மயக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார்.

வித்தியாசமான கதை
ஹிந்தி திரைப்படங்களில் தனது நடிப்பின் மூலம் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி வரும் வித்யாபாலன், இந்திய சினிமாவில் இன்று வரை வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹிந்தியில் மட்டுமல்லாமல்
இவரின் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தட்டிச் சென்ற நிலையில் இவர் ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரைப்படத்தில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமாகி உள்ளார்.

சிறந்த அறிமுக நடிகை
பாலோ தேகோ என்னும் வங்காள திரைப்படத்தில் நடித்ததன் மூலம், திரைத்துறைக்கு அறிமுகமான வித்யாபாலன். இந்தியில் பரிநீத்தா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் ரசிகர்களுக்கு தனது சிறந்த அறிமுகமானது மட்டுமல்லாமல் அந்த ஆண்டு பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினைப் பெற்றார்.

கௌரவ தோற்றத்தில்
தமிழில் உச்ச நடிகராக உள்ள தல அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் வந்து காட்சியளித்த வித்யாபாலன், இதற்கு முன் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒருசேர வெளியான உருமி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தேசிய விருது
தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தி டர்ட்டி பிக்சர் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்று ஹிந்தி திரைப்படத் துறையை கலங்கடித்து வந்துள்ளார்.

தேவைக்கு ஏற்ப கவர்ச்சி
திரைப்படங்களை பார்த்து தேர்ந்தெடுத்து சிறந்த கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து இந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர் திரைப்படங்களில் கதைகளுக்கு ஏற்றார்போல் கவர்ச்சியை காட்டி வந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

படு கவர்ச்சியான பார்வையில்
சமீபத்தில் இவர் நடித்த சகுந்தலா தேவி திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில், மேல் சட்டையை கழட்டி விட்டவாறு முன்னழகை காட்டிக்கொண்டு படு கவர்ச்சியான பார்வையில் அனைவரையும் கலங்க வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்களால் ரசிக்கப்பட்டு "அழகியே " என பலரும் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











