அந்த இயக்குநர் படுக்கைக்கு அழைத்தார்.. வித்யா பாலன் பகிர்ந்த பகீர் தகவல்!
சென்னை : நடிகை வித்யா பாலன் இயக்குநர் ஒருவரை சந்தித்த போது அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார் என பகீர் தகவலை கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகையான வித்யா பாலன், தமிழில் டாப் நடிகரின் படத்தில் நடித்து, தமிழ் ஆடியன்சுக்கும் தெரிந்த முகமாக மாறி உள்ளார்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தி டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

நடிகை வித்யா பாலன்
நடிகை வித்யா பாலன் நடிப்பில் கடந்த ஆண்டு ஷெர்னி மற்றும் ஜல்சா திரைப்படங்கள் வெளியாகின. இதில் ஷெர்னி படத்தில் இந்திய வன சேவை அதிகாரியாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். இந்த படத்தைத் தொடர்ந்து, நியாத் என்ற படத்திலும், பெயரிடப்படாத இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

மோசமான அனுபவம்
பாலிவுட்டில் தொடர்ந்து வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் வித்யா பாலன், சினிமா வாழ்க்கையில் தனக்கு நிகழ்ந்த மோசமான அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், உண்மையில் நான் காஸ்டிங் கவுச் பற்றி அவ்வளவு அனுபவம் ஏற்படவில்லை. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் நான் திகில் படங்களிலேயே அதிகம் நடித்து இருக்கிறேன். ஏனென்றால் என் பெற்றாருக்கு நான் படங்களில் நடிப்பதை விரும்பவில்லை.

என்னை கட்டாயப்படுத்தினார்
நான் விளம்பர பட ஒன்றின் படப்பிடிப்புக்காக சென்னை வந்திருந்தேன். அப்போது ஒரு இயக்குநர் என்னிடம் கதை கூறவேண்டும் என்றார். நான் அவரிடம் கதை கேட்க, காபி ஷாப்பிற்கு வர சொன்னேன். ஆனால் அவர், காபி ஷாப் வேண்டாம் ஹோட்டலில் மீட் பண்ணலாம் என்று என்னை கட்டாயப்படுத்தினார். அவருடைய நோக்கம் எனக்கு நன்றாக புரிந்து விட்டது.

ஹோட்டலுக்கு அழைத்தார்
இதனால், புத்திசாலித்தனமாக திட்டம் போட்டு இயக்குநரை ஹோட்டலுக்கு வரவழைத்துவிட்டு அறையின் கதவைத் திறந்தே வைத்திருந்தேன். நான் கதவை மூடுவேன் என்று எதிர்பார்த்து சிறிதுநேரம் காத்து இருந்த அவர், கதவு மூடாமல் இருந்ததால் இனி மேல் வேளைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்து அங்கிருந்து கிளம்பிவிட்டார். அவரது படத்தில் இருந்தும் என்னை நீக்கிவிட்டார் என்று நடிகை தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து கூறியுள்ளார்.

அஜித்தின் மனைவி
நடிகை வித்யா பாலன், பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரே பாடல் காட்சியில் நடித்திருந்தாலும் அந்த காட்சி படத்திற்கு மிகவும் அழுத்தமான காட்சியாக இருந்தால், தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாகவும், பிடித்த முகமாகவும் மாறிவிட்டார்.


Click it and Unblock the Notifications