இந்த சூப்பர் ஸ்டார் படங்களை எல்லாம் விட, என் படங்களுக்கும்... வித்யா பாலனின் ஆசை ஆசை பேராசை

By

Recommended Video

Actress Vidhya Balan: About her harmonal problems உடல் எடை பிரச்சனை குறித்து பேசியுள்ளார்

மும்பை: சூப்பர் ஸ்டார் படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங்கை விட தனது படத்துக்கு அதிக ஓபனிங் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாக, நடிகை வித்யா பாலன் தெரிவித்தார்.

பிரபல இந்தி நடிகை வித்யா பாலன். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர், கஹானி, துமாரி சுலு, பரினீதா, பா, மிஷன்மங்கள் உட்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார்.

தமிழில், அஜித் ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்த இவர், இப்போது உலகின் வேகமான மனிதக் கணினி என்று அழைக்கப்படும் சகுந்தலா தேவியின் வாழ்க்கைக் கதையில் நடித்துவருகிறார்.

என் பேராசை

என் பேராசை

இதற்கிடையே கல்லூரி விழா ஒன்றில் பேசிய வித்யாபாலன், தனது ஆசையை சொன்னார். பிறகு அது பேராசை என்றும் அவர் ஒப்புக்கொண்டார். சூப்பர் ஸ்டார் படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங்கை விட, நான் நடிக்கும் படங்களுக்கு பெரிய ஓபனிங் கிடைக்க வேண்டும். இதுதான் என் பேராசை என்று சொல்லிச் சிரித்தார் வித்யா பாலன்.

சுவாரஸ்யமாக

சுவாரஸ்யமாக

அவர் மேலும் கூறும்போது, சினிமா இப்போது சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த பத்து வருடங்களை அதிகமாக எதிர்பார்க்கிறேன். 41 வயது நடிகை நான். எனக்கு வரும் கேரக்டர்கள் மற்றும் படங்களை நினைத்து வியப்படைக்கிறேன் என்றார்.

ஶ்ரீதேவி, ஷபானா ஆஸ்மி

ஶ்ரீதேவி, ஷபானா ஆஸ்மி

அவரிடம் சினிமாவில் நீங்கள் மதிக்கும் நடிகைகள் பற்றி கேட்டபோது, ஒருவர் ஷபானா ஆஸ்மி. மற்றொருவர் ஶ்ரீதேவி என்றார். ஷபானா ஆஸ்மி, தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கக் கூடியவர். அவரது சினிமா கேரக்டர்களும் போல்டாக இருக்கும். அவர் என்னுள் அதிக ஆதிக்கம் செலுத்துபவர்.

நேர் மாறானவர்

நேர் மாறானவர்

ஶ்ரீதேவி, இவருக்கு நேர் மாறானவர். ஆனால், சினிமாவில் தன்னை நிலைநாட்டியவர். ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வாங்கியவர். அவர் பலவிதமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X