முத்திரை பதிக்கும் முத்தான "நாயகி"..கல்யாண பெண் போல கலக்குறீங்களே !
சென்னை : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பல பிரபலங்களில் நடிகை வித்யா பிரதீப்பும் ஒருவர்.
'சைவம்', 'பசங்க2', 'அச்சமின்றி', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'களரி', 'மாரி 2', 'தடம்', 'பொன்மகள் வந்தாள்' போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் வித்யா பிரதீப். பல படங்களில் நடித்து தனக்கென ஒரு சரியான அங்கீகாரம் கிடைக்காததால் சீரியல் பக்கம் வந்த வித்யா பிரதீப்" நாயகி" என்ற தொலைக்காட்சித் தொடர் பெரும் வெற்றி பெற்றதுடன், இவரது நடிப்புத் திறனையும் நன்கு வெளிப்படுத்தியது.

நாயகி தொடர் மூலம் இல்லத்தரசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்ட வித்யா பிரதீப், 'தடம்' படத்தில் ஏற்று நடித்த மலர்விழி பாத்திரம் மூலம் இளைஞர்களின் உள்ளங்களையும் கவர்ந்து, மிக இளம் வயதில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
சீரியலில் அவர் நடிப்பைப் பார்த்த பல இயக்குனர்கள் இவரை தற்போது அவர்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் "எக்கோ" என்ற படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்துள்ளார் வித்யா பிரதீப். இந்த படம் திரில்லர் படமாக உருவாகி கொண்டிருக்கின்றது இப்படத்தை அறிமுக இயக்குனர் நவீன் இயக்குகிறார்.

ஏற்கும் வேடம் எதுவாக இருந்தாலும் அதில் முத்திரை பதிக்கும் வித்யா பிரதீப் நடித்த திரைப்படங்கள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர தயாராக இருக்கின்றன. ஊரடங்கு சமயத்திலும் விதவிதமான போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் வித்யா பிரதீப். சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் கல்யாண பெண் போன்று உள்ளார் .



Click it and Unblock the Notifications











