'முதல் கிரஷ் அவர் மேலதான்...' ஜெயலலிதா பயோபிக்கான 'தலைவி'யில் இந்த ஹீரோயினும் இருக்கிறார்
சென்னை: ஜெயலலிதான் வாழ்க்கைக் கதையான 'தலைவி' படத்தில் நடிகை வித்யா பிரதீப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை சினிமாவாக்கப்பட்டு வருகிறது. இதை இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் இயக்கி வருகிறார்.
ஜெயலலிதாவாக, இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார். இவர் தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்தவர்.

பிரகாஷ் ராஜ்
எம்.ஜி.ஆர். ஆக, நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ் கருணாநிதியாகவும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக பிரியாமணி நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் 'எம்ஜிஆர் லுக்' போஸ்டரை படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. எம்.ஜி.ஆர்.பிறந்த நாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியிடப்பட்டது.

ஸ்பெஷல் டீசர்
அதில் அரவிந்த் சாமி, அப்படியே எம்.ஜி.ஆர் போலவே இருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். அவர் எம்.ஜி.ஆர் பாடலுக்கு நடனம் ஆடும் ஸ்பெஷல் டீசரும் வெளியிடப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.

வித்யா பிரதீப்
இந்நிலையில், இந்தப் படத்தில் தானும் நடிக்க இருப்பதாக, நடிகை வித்யா பிரதீப் தெரிவித்துள்ளார். இவர், அவள் பெயர் தமிழரசி, சைவம், பசங்க 2, மாரி 2 படங்களில் நடித்திருந்தார். கடைசியாக, அருண் விஜய்யின் தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

அரவிந்த்சாமி மீது
தலைவி படத்தில் அரவிந்த் சாமியுடன் பிளாஷ்பேக் காட்சியில் வித்யா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அவர் கூறும்போது, பள்ளி காலத்தில் அரவிந்த்சாமி மீது எனக்கு கிரஷ் இருந்தது. அவருடன் நடிக்க வேண்டும் என்ற என் கனவு நனவாகி இருக்கிறது. இயக்குனர் விஜய்-க்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இவர் யார் கேரக்டரில் நடிக்கிறார் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











