தொழிலதிபரை மணந்த நகைச்சுவை நடிகை… குவியும் வாழ்த்து !

சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமன் தொழிலதிபர் சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதிக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் சீரியல் நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார். மேலும், செல்வராகவனின் மச்சினியும் ஆவார்.

வித்யுலேகா ராமன்

வித்யுலேகா ராமன்

தமிழ் சினிமாவில் காமெடி பண்ணி சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்களே ரொம்ப கம்மி அதிலும் நடிகைகளில் கோவை சரளாவுக்கு பிறகு முக்கியமானவர் வித்யுலேகா ராமன். இவர் பெரும்பாலும் தனது பாடி லாங்குவேஜால் ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.

அறிமுகம்

அறிமுகம்

இவர், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான நீதானே என் பொன் வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்தார். இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் சமந்தாவின் தோழியாக நடித்தார். அடுத்தடுத்து வீரம், ஜில்லா, ப.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன். சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார்.

ஸ்லிம் லுக்

ஸ்லிம் லுக்

பல வருடங்களாக தனது உடல் எடையை குறைக்க கடும் முயற்சிகளில் இறங்கியிருந்த வித்யுலேகா லாக்டவுன் நேரத்தில் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு 30 கிலோ வரை உடல் எடையை குறைந்து செம ஸ்லிம் அண்ட் க்யூட்டாக மாறிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

என்னடா அம்மணி இவ்வளவு ஆர்வமாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்குறாங்களேனு பார்த்தா அம்மணிக்கு திருமணம் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த ஆண்டு வித்யுலேகா ராமனுக்கும், சஞ்சய் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

திருமணம்

திருமணம்

இந்நிலையில் தற்போது சஞ்சய்யும், வித்யுலேகாவும் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நேரில் வாழ்த்து

நேரில் வாழ்த்து

திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் செல்வராகவன் அவரது மனைவி கீதாஞ்சலியுடன் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் வித்யூலேகாவுடன் கீதாஞ்சலி நடனமாடிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. கீதாஞ்சலியின் தங்கைதான் வித்யூலேகா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X