படுக்கையறை முதல் பாத்ரூம் வரை.. மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய வீடியோவை வெளியிட்ட வித்யூராமன்!
சென்னை: சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட காமெடி நடிகை வித்யூராமன் தனது கணவர் சஞ்சய் உடன் மாலத்தீவில் ஹனிமூன் டூர் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான நீதானே என் பொன் வசந்தம் படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா ராமன்.
திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கிய நிலையில், மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

தொழிலதிபருடன் திருமணம்
சென்னையை சேர்ந்த தொழிலதிபருடன் பிரபல காமெடி நடிகை வித்யூலேகா ராமன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களின் வாழ்த்துக்களையும் பெற்றார்.

ஷாம்பைன் பார்ட்டி
திருமணத்துக்கு முன்பாக பேச்சுலர் பார்ட்டி நடத்திய வித்யூலேகா ராமன் ஷாம்பைன் உடன் போஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். க்ளிட்டர் உடையில் மணமகள் வித்யூலேகா ராமன் தனது தோழிகளுடன் திருமணத்துக்கு முந்தைய பார்ட்டியை நல்லாவே என்ஜாய் பண்ண புகைப்படங்கள் வெளியாகின.

மாலத்தீவில் ஹனிமூன்
நடிகை காஜல் அகர்வாலை தொடர்ந்து மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய பெருமை வித்யூலேகா ராமனையே சேரும். கணவர் சஞ்சய் உடன் மாலத்தீவில் தனது தேனிலவை கொண்டாடிய வித்யூலேகா ராமன் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
Recommended Video

கணவர் க்ளிக் செய்த பிக்
மாலத்தீவு கடற்கரையில் உள்ள சொகுசு ரெசார்ட்டில் கணவருடன் ஹனிமூன் கொண்டாடிய வித்யூலேகா ராமன் மஞ்சள் நிற உடையை அணிந்து கொண்டு அதற்கு மேட்சிங்கான ஹேண்ட்பேக்கை அருகே வைத்தபடி மரத்தின் மீது அமர்ந்திருக்க வித்யூலேகாவின் கணவர் க்ளிக் செய்த அட்டகாச புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.
படுக்கையறை முதல் பாத்ரூம் வரை
மேலும், மற்றொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் வித்யூலேகா ராமன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளித்துக் கொண்டிருக்க அவருடைய கணவர் தாங்கள் தங்கியுள்ள ரெசார்ட்டின் படுக்கையறை முதல் பாத்ரூம் வரை அனைத்து இடங்களையும் சுற்றிக் காண்பித்துள்ள வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

என்ஜாய் பண்ணுங்க
மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடி வரும் வித்யூலேகா ராமன் தொடர்ந்து வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்து வரும் நிலையில், அவரது ரசிகர்கள் ஹனிமூனை என்ஜாய் பண்ணுங்க என கமெண்ட் பக்கத்தில் வாழ்த்தி வருகின்றனர். நைஸ் லொகேஷன் என்றும் தேனிலவுக்கான சரியான இடம் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











