இதென்னடா போஸ்... திருமணத்திற்கு பின் டோட்டலா மாறிய வித்யுலேகா ராமன்!

சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமன் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தனது கணவருடன் மாலத்தீவில் தேனிலவை கொண்டாடி வரும் வித்யுலேகா, தொடர்ந்து வீடியோக்கள் மற்றும் செம்ம மார்டன் லுக்கில் ஹாட் கிளிக்குகளை தட்டிவிட்டு வருகிறார்.

சீரியல் நடிகர் மோகன் ராமின் மகளான வித்யுலேகா, செல்வராகவனின் மச்சினி ஆவார்.

வித்யுலேகா ராமன்

வித்யுலேகா ராமன்

தமிழ் சினிமாவில் பெண் நகைச்சுவை நடிகர்களை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளனர். நடிகை கோவை சரளாவுக்கு பிறகு தனது இயல்பான பேச்சாலும், தனது தோற்றத்தையும் பிளஸ் ஆக்கி ரசிகர்களை கலகலவென சிரிக்க வைத்தவர் வித்யுலேகா ராமன்.

அறிமுகம்

அறிமுகம்

இவர், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான நீதானே என் பொன் வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்தார். இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் சமந்தாவின் தோழியாக நடித்தார். அடுத்தடுத்து வீரம், ஜில்லா, பா.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர், சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார்.

ஸ்லிம் லுக்

ஸ்லிம் லுக்

பல வருடங்களாக தனது உடல் எடையை குறைக்க கடும் முயற்சிகளில் இறங்கியிருந்த வித்யுலேகா லாக்டவுன் நேரத்தில் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு 30 கிலோ வரை உடல் எடையை குறைத்து செம ஸ்லிம் அண்ட் க்யூட்டாக மாறினார்.

திருமணம்

திருமணம்

வித்யுலேகா ராமனுக்கும், சஞ்சய் என்பவருக்கும் கடந்த மாதம் சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பிகினியில்

பிகினியில்

திருமணம் ஆன கையோடு மாலத்தீவுக்கு தேனிலவு சென்ற வித்யுலேகா ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாறுமாறான புகைப்படங்களை அப்லோடு செய்து வருகிறார். தற்போது, இவர் மஞ்சள் நிற பிகினியில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு அலைகளுக்கு நடுவே போஸ் கொடுத்துள்ளார். பார்ப்பவர் கண் கூசும் அளவுக்கு இந்த புகைப்படத்தில் கவர்ச்சி கதகளி ஆடுகிறது. இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வந்தாலும், ஒரு சில ரசிகர்கள் என்ன வித்யூ கல்யாணத்திற்கு பிறகு இப்படி மாறிடீங்க என்று கேட்டு வருகின்றனர். ஒரு சிலர், அட ஹனிமூன்பா... கொஞ்சம் எக்குதப்பாத்தான் இருக்கும் என்றும் பலரும் பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X