உங்களுக்கு எப்போ டைவர்ஸ் … என்ன மட்டமான புத்தி… நெட்டிசனை விளாசிய வித்யூலேகா !

சென்னை : பார்ப்பதற்கு கொழு கொழுவென அமுல் பேபி போல இருக்கும் வித்யூலேகா சமீபத்தில் தீவிர உடற்பயிற்சி செய்து சும்மா சிக்குனு மாறினார்.

அம்மணியின் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவோ என்று யோசித்த போது, சஞ்சய் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்.

புதுமண தம்பதிகள், மாலத்தீவில் ஹனிமூனைக் கொண்டாடி வரும் நேரத்தில், வித்யூலேகா பகிர்ந்த பிகினி போட்டோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வித்யூலேகா ராமன்

வித்யூலேகா ராமன்

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான நீதானே என் பொன் வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூலேகா. அந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்திருந்தார். இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து வீரம், ஜில்லா, பா.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர், சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார்.

ஸ்லிம் லுக்

ஸ்லிம் லுக்

பல வருடங்களாக தனது உடல் எடையை குறைக்க கடும் முயற்சிகளில் இறங்கியிருந்த வித்யூலேகா லாக்டவுன் நேரத்தில் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு 30 கிலோ வரை உடல் எடையை குறைத்து செம ஸ்லிம் அண்ட் க்யூட்டாக மாறினார்.

உங்களுக்கு எப்போ டைவர்ஸ்

உங்களுக்கு எப்போ டைவர்ஸ்

கடந்த மாதம் சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்ட வித்யூலேகா. மாலத்தீவில் தேன் நிலவை கொண்டாடி வருகிறார். சமீபத்தில் வித்யூலேகா பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். ஒரு நெட்டிசன் அவரை விமர்சித்ததுடன் நீங்க எப்போ டைவர்ஸ் பண்றீங்க என்று கேட்டுள்ளார்.

சந்தோஷமான வாழ்க்கை

சந்தோஷமான வாழ்க்கை

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, அங்கிள் ஆண்டீஸ் 2021 க்கு வாருங்கள்.இந்த சமூகம் ஏன் இப்படி இருக்கிறது. ஒரு பெண் அணியும் ஆடைகளால் தான் விவாகரத்து ஏற்படும் என்றால் ஒழுங்காக ஆடை அணிந்து கொண்டு இருக்கும் அனைவருமே சந்தோஷமான திருமண வாழ்க்கையை வாழ்கிறார்களா.

மட்டமான புத்தி

மட்டமான புத்தி

நல்லபடியாக எனக்கு பாதுகாப்பான ஒரு கணவர் கிடைத்திருக்கிறார். அவர் இதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் என்று தான் சொன்னார். ஆனால், உங்களின் குறுகலான, விஷமத் தன்மையுடைய புத்தியை என்னால் மாற்ற முடியாது. உங்களுக்கு வரப்போகும் பெண் உங்களின் மட்டமான புத்தியை மாற்றுவார் என்று நம்புகிறேன் வாழு வாழ விடு என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X