23 ஆயிரம் டிக்கெட்.. தண்ணீர் பாட்டீல் கூட இல்ல.. இண்டிகோ ஏர்லைன்சை கிழித்தெறிந்த வித்யுலேகா!

சென்னை: எழுத்தாளர் மோகன் ராமனின் மகளான நடிகை வித்யுலேகா ராமன் 'நீ தானே என் பொன்வசந்தம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து, ஜில்லா, வீரம் , புலி, வேதாளம் என தமிழ் சினிமா முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் இணைந்து பல திரைப்படத்தில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார் வித்யுலேகா. Indigo ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

நடிகை வித்யுலேகா ராமன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஒரு வழி டிக்கெட்டுக்கே ₹23,000 வசூலித்தும் பயணிகளுக்கு மனிதநேயமற்ற அனுபவத்தை வழங்கியதாக Indigo ஏர்லைன்சுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மாலை 6.15 மணிக்கு ஹைதராபாத் - சென்னை நோக்கி புறப்பட இருந்த விமானம், திட்டமிட்ட நேரத்தில் புறப்படாமல் பல மணி நேர தாமதமாக புறப்பட்டது.

Vidyullekha Raman IndiGo Airlines
Photo Credit:

நடிகை வித்யுலேகா: முந்தைய நாளே பயணம் செய்ய வேண்டிய பயணிகள் கூட இன்னும் விமான நிலையத்தில் காத்திருந்தனர். பலர் தாமதத்திற்கு என்ன காரணம் என பல முறை பதில் கேட்டும் பதில் கிடைக்காததால், பல பயணிகள் போராடினார்கள். இன்றும் பல மூத்த குடிமக்கள், குழந்தையுடன் வந்த தாய்மார்கள் என பலர் மணிகணக்கில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிக்கி தவித்தனர். மேனேஜ்மென்ட் மீது இருந்த கோபம் அங்கிருந்த Indigo ஊழியர்களின் மீது காட்டப்பட்டதால், ஊழியர்கள் எந்த தகவலும் தராமல் அங்கிருந்து சென்றுவிட்டனர். இரவு 1 மணி வரையிலும் பயணிகளுக்கு ஒரு தண்ணீர் பாட்டீல் கூட வழங்கப்படவில்லை.

தண்ணீர் பாட்டீல் கூட இல்லை: விமானத்தில் இருந்த கேபின் குழுவினரின் பணிநேரம் முடிவடைந்ததால், அவர்களும் வெளியே சென்றுவிட்டனர். ஆனால், அதே விமானத்தில் பயணிகளாக இருந்த 'Off-Duty' கேபின் குழு உறுப்பினர்களே சூழ்நிலையை புரிந்து கொண்டு, நள்ளிரவு ஒரு மணி அளவில் பயணிகளுக்கு தண்ணீர் கொடுத்து உதவினார்கள். இப்படி பெரும் போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்தடைந்தேன்.

புதிய DGCA விதிகளை அமல்படுத்த Indigo-வுக்கு முழு ஒரு வருட கால அவகாசம் இருந்த போதிலும், சரியான மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் போனதே இச்சம்பவத்தின் மூல காரணம் என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பயணிக்கும் டிக்கெட் விலைவிட 3 மடங்கு இழப்பீடு தரவேண்டும். மேலும், மனிதநேயமற்ற சூழலில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 5 மடங்கு இழப்பீடு தரவேண்டும் என நடிகை வித்யுலோக புகார் அளிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ லிங்க், தனது வீடியோ பதிவின் கீழே இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X