மகனை பார்த்து கதறி அழுத விஜயலட்சுமி... வைரலாகும் வீடியோ
சென்னை : நடிகை விஜயலட்சுமி தொடர்கள் மற்றும் சினிமாவில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சர்வைவர் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அடுத்தடுத்த வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி கோலிவுட்டில் சென்னை 28 படம் மூலம் கோலிவுட்டில் சிறப்பான அறிமுகத்தை பெற்றார். தொடர்ந்து அவருக்கு திரையுலகில் சிறப்பான படங்கள் அமையவில்லை. இதையடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தொடர்ந்து சின்னத்திரையில் கால்பதித்த அவர் நாயகி என்ற தொடரில் நடித்தார்.

சர்வைவர் நிகழ்ச்சி
ஆனால் அந்த தொடரிலிருந்து இடையிலேயே விலகிய இவர் தொடர்ந்து விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நீதிபதி என தனது பயணத்தை மேற்கொண்டார். பின் அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் நடத்தப்பட்ட சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

டைட்டில் வின்னர்
உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற அடிப்படையில் ஒளிபரப்பப்பட்ட இந்த ரியாலிட்டி ஷோவில் பல்வேறு டாஸ்க்குகளை முடித்து ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக விஜயலட்சுமி டைட்டிலையும் வெற்றி பெற்றார். இவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. இதற்காக தனது குடும்பத்தினரை பிரிந்து 90 நாட்கள் தீவு ஒன்றில் இருந்தார்.

வீடியோக்கள் பகிர்வு
அவரது 3 வயது மகன் மற்றும் கணவரை பிரிந்து இந்த ஷோவில் அவர் பங்கேற்றார். இதையடுத்து வீடு திரும்பிய அவர், தனது சமூகவலைதள பக்கத்தில் பல்வேறு வீடியோக்களை பகிர்ந்தார். இதனால் அவரது ரசிகர்கள் லிஸ்ட் அதிகமானது. தனது சொந்தங்களை சந்தித்தது உள்ளிட்ட பல வீடியோக்களை அவர் பகிர்ந்தார்.

நெகிழ்ச்சி வீடியோ
இதனிடையே அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் 90 நாளைக்கு பிறகு சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து திரும்பிபோது நிகழ்ந்த நிகழ்வை அவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். 90 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்த அவர் தனது 3 வயது மகனை பார்த்து கட்டியணைத்து கதறி அழுதுள்ளார்.

ரசிகர்கள் கமெண்ட்
இந்த வீடியோவை பார்த்தவர்கள் அனைவரும் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர். தாய்ப்பாசம் எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது என்று தெரிவித்து வருகின்றனர். 90 நாட்களுக்கு பிறகு தனது மகன் நிலனை பார்த்து கண்ணீர் விட்டு விஜயலட்சுமி அழுத இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











