"இட்ஸ் மி விஜி ".. சென்னை28 நடிகையின் யூடியூப் சேனல்.. வாழ்த்திய சாந்தனு !
சென்னை : நடிகை விஜயலட்சுமி புதிதாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி உள்ளார்.
சென்னை 28 படத்தின் மூலம் நம் அனைவருக்கும் தெரிந்த முகமான நடிகை விஜயலட்சுமி. பிக் பாஸ், சீரியல், படங்களில் நடித்து நம் அனைவரையும் ரசிக்க வைத்து பலரின் மனதில் நீங்க இடம் பிடித்தார்.
Recommended Video
யூடியூபராக அவதாரம் எடுத்து இருக்கும் விஜயலட்சுமிக்கு சாந்தனு பாக்யராஜ் கலகலப்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை-28
சென்னை-28 படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை விஜயலட்சுமி கோகுலத்தில் சீதை, காதல் கோட்டை, காதல் கவிதை போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் அகத்தியன் மகளான இவர் தற்போது தமிழ்த் திரைத்துறையில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எதிர்பார்ப்பும் இல்லாமல்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு பல நட்சத்திரங்கள் நடித்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான சென்னை 28 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் நம் அனைவருக்கும் அறிமுகமான விஜயலட்சுமி இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் பலராலும் அதிகமாக பாராட்டப்பட்டார்.

ஜாக்பாட் அடித்தது
இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் தனது அடியை எடுத்து வைத்தார். சென்னை 28 படத்தில் நடித்ததற்காக சிறந்த புதுமுக நடிகை என்ற விருதைப் பெற்ற இவருக்கு ஜாக்பாட் அடித்தது மாதிரி அடுத்த படமே இயக்குனர் மிஷ்கின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

பாராட்டுகளையும்
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நரேன் மற்றும் பிரசன்னா இணைந்து மிரட்டி இருந்த அஞ்சாதே திரைப்படம், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. இவ்வாறு மிகப் பெரிய வெற்றி அடைந்த இந்த படம் பல விருதுகளையும் நடிகர் நரேன், அஜ்மல் மற்றும் பிரசன்னாவின் நடிப்பிற்காக சிறந்த பாராட்டுகளையும் பெற்று வந்தது.

நடிப்பை தொடர்ந்து
இவ்வாறு விஜயலட்சுமி நடித்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இவர் தொடர்ந்து அதே நேரம் அதே இடம், பிரியாணி, வெண்ணிலா வீடு, சென்னை 28 பார்ட் 2, போன்ற படங்களின் மூலம் தனது நடிப்பை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

சிம்புதேவன் இயக்கத்தில்
இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் பல வளரும் நடிகர்களைக் கொண்டு உருவாகி வரும் அந்தாலஜி படமான "கசடதபற" படத்தில் இவர் இப்போது நடித்து வரும் வேளையில் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் பரவலாக கூடிவருகிறது. இந்த நிலையில் தற்போதுள்ள லாக்டவுன் சூழலில் பலரும் தங்களது திறமைகளை போட்டோக்களின் மூலமும் வீடியோக்களின் மூலமும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

முன்னோட்டக் காட்சி
அந்த வகையில் ஏற்கனவே நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வரும் விஜயலட்சுமி தற்பொழுது யூடியூபராக களமிறங்கி இருக்கிறார். "இட்ஸ் மி விஜி " என்ற தலைப்பில் யூடியூப் சேனலை தொடங்கியிருக்கும் இவர் சில நாட்களுக்கு முன்பு அதைப்பற்றிய ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து தற்போது இவர் வெளியிட்டுள்ள முதல் வீடியோவின் முன்னோட்டக் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

சுவாரசிய தகவல்களை
ஈசிஆரில் ரெக்கை கட்டி பறப்பது போல ஆரம்பிக்கும் முதல் வீடியோவே தனது காரை பற்றிய பல சுவாரசிய தகவல்களை ஆராய வைக்கும், இந்த வீடியோவின் ப்ரோமோ காட்சி கார் பிரியர்களை மட்டும் அல்லாமல் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

தன்னையும் யூடியூபராக
இந்த நிலையில் ஏற்கனவே நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது அப்பா பாக்யராஜ் உடன் இணைந்து பேசி வரும் உரையாடல்களை எடுத்து வீடியோ காட்சியாக தொடுத்து தனது யூடியூப் சேனல் மூலம் பதிவிட்டு இந்த லாக்டவுனில் தன்னையும் யூடியூபராக மாற்றிக்கொண்டு பலரையும் ஈர்த்து வருகிறார்.

ஹன்சிகா மோத்வானி
சாந்தனு விஜயலட்சுமியின் இந்த சேனலை பார்த்துவிட்டு "இப்போ நாம எல்லாம் யூடியூபர் ஃபேமிலி ஆகிட்டோம்" என பூரிப்புடன் கூறிவருகிறார். சாந்தனு பாக்யராஜ், விஜயலட்சுமி, ஹன்சிகா மோத்வானி போன்ற திரைப் பிரபலங்களும் தற்பொழுது யூடியூப் சேனல் மூலம் யூடியூபர் ஆக களமிறங்கி கலக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











