டிக்டாக்கில் ஆட்டம் போட்ட விஜயலட்சுமி.. ப்ளீஸ் ஆடாதம்மா.. கிண்டலடித்த நெட்டிசன்ஸ் !
சென்னை : நடிகர் விஜயலட்சுமி டிக்டாக்கில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை 28 படம் மூலம் திரைக்கு வந்த விஜயலக்ஷ்மி, அஞ்சாதே, சரோஜா போன்ற பல படங்களில் நடித்தாலும் சில படங்களே அவருக்கு பெயர் வாங்கித்தந்தது. பிரபல டைரக்டர் அகத்தியனின் மகளாக இருந்தாலும் அவரால் நல்ல ஹிட் படங்கள் கொடுத்து சினிமாவில் நிலைக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை ..

திருமணமாகி செட்டிலான இவர் வெள்ளித்திரை தனக்கு கை கொடுக்காததால் சின்ன திரைக்கு வந்துவிட்டார். சின்னத்திரையில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் சீரியலில் இருந்து பிக்பாஸ் வீட்டுக்கு சென்றார். அந்த வீட்டில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் சமூகவலைத்தளங்களில் தினமும் டிக்டாக், போட்டோஸ், யோகா போன்றவற்றை பதிவிடுவதில் பிஸியாக இருக்கிறார். சமீப காலமாக தனது சிறு வயது புகைப்படத்தையும், அவர் சமைத்த உணவு, போன்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்..

அண்மையில் இவர் வெளியிட்ட டிக்டாக் டான்ஸ் ஒன்று அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. அவரது டான்ஸ் ரசிக்கும் படியாக இல்லையென்றாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது முகம் மக்களின் நினைவிற்கு வருகிறது. இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் தயவு செய்து டான்ஸ் மட்டும் ஆடாதம்மா என்று கிண்டலடித்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள் தனது அன்றாட வேலைகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது ஒன்றும் புதிது அல்ல. அந்த வகையில் இவரும் தனது ரியாக்ஷன்களையும், டான்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இவர் வெப் சீரிஸ் ஒன்றில் சென்ற ஆண்டு நடித்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











