இந்த ஆட்டம் தேவையா ? என கேட்ட பெண்... நெத்தியடி பதிலளித்த விஜி !

சென்னை : பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான நடிகை விஜயலட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

அந்த டான்சை பார்த்த ஒரு பெண் இந்த ஆட்டம் தேவையா? என கேட்க அந்த பெண்ணுக்கு தரமான நெத்தியடினான பதிலளித்துள்ளார் விஜி.

நடிகை விஜயலட்சுமியின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை விஜயலட்சுமி

நடிகை விஜயலட்சுமி

நடிகை விஜயலட்சுமி 2007ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சென்னை28 திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இதையடுத்து, அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், சரோஜா, கற்றது களவு போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும்போதே, தனது நண்பர் பெரோசை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

சர்வைவரில்

சர்வைவரில்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2ல் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ஆனால் வெற்றி பெறவில்லை. இதையடுத்து, ஜீ தொலைக்காட்சியில் அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 90 நாட்கள் அந்த நிகழ்ச்சியிலிருந்து சர்வைவர் டைட்டிலை வென்றார்.

இந்த ஆட்டம் தேவையா ?

இந்த ஆட்டம் தேவையா ?

சமூக வலைத்தளங்களில் எப்போதும் தன்னை ஆக்டிவாக வைத்திருக்கும், விஜி அவ்வப்போது புகைப்படங்கள்,வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவை பார்த்த பெண், இந்த ஆட்டம் தேவையா ? ஒரு அம்மாவா இருக்க என்று கேட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு நெத்தியடி பதிலளித்துள்ளார்.

குடும்ப குத்துவிளக்கு மேடம்

குடும்ப குத்துவிளக்கு மேடம்

அதில், அம்மானா மூலையில் உங்காத்துக்கிட்டு அழனுமா? ஐயோ, அவ்வளவுதான் என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு இனிமே எல்லாருக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன் நான் ஒரு தியாகினு. அத நீ பண்ணு உனக்கு சிலை வைப்பாங்க, தியாக செம்மல்னு. எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது குழந்தை பெற்ற பல அம்மாக்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்வார்கள். அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிவார்கள். உன்ன மாதிரி ஆளுங்களால தான் நிறைய பொண்ணுங்களுக்கு பிரச்சனை என்று சகட்டுமேனிக்கு அந்த பெண்ணை திட்டி தீர்த்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X