நம்ம விஜயலட்சுமியா இது...!
சென்னை: விஜயலட்சுமி.. பெங்களூரிலிருந்து தமிழுக்கு வந்து சில படங்களில் மனதைக் கொள்ளை கொண்டவர். பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசத்தியவர். இன்று ஆள் அட்ரஸே இல்லாமல் போய் விட்டார்.
இடையில் இவர் தொடர்பான சில சர்ச்சைகளால் பரபரப்பை ஏற்படுத்தியவர். திடீரென பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நல்ல நடிப்பையும் கொடுத்தார். மறுபடியும் காணாமல் போனார்.
இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் கத சொல்லப் போறோம் படம் மூலமாக.

மெலிஞ்சு போய்
கத சொல்லப் போறோம் படத்தில் முக்கிய வேடத்தில் வருகிறாராம் விஜயலட்சுமி. ஆள் பார்க்க நன்றாக மெலிந்து போய் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போயுள்ளார்.

ஒல்லிக்குச்சியாக.. ஆனால் அழகாக!
முன்பை விட மேலும் மெலிந்து போய் காணப்படுகிறார் விஜயலட்சுமி. மெலிந்து போயிருக்கிறாரே தவிர அந்த க்யூட் அழகு அப்படியேதான் இருக்கிறது

முகம் கழுவாத நிலவு போல
சிரிக்கும்போது முகம் மலருமே.. அந்த மலர்ச்சி மறையவில்லை. விழித்தெழுந்து, முகம் கழுவாமல் வந்த நிலவு போல அழகோடுதான் இருக்கிறார்.

பணம் கேட்டு நச்சரிக்கிறாராமே...
இடையில் விஜயலட்சுமி குறித்து புது சர்ச்சையும் வந்தது. அதாவது தான் பணக் கஷ்டத்தில் இருப்பதாக கூறி தனது திரையுலக நண்பர்களை நச்சரிக்கிறார் விஜயலட்சுமி என்பதே அது.

முழு வீச்சில் நடித்தால்
இது போன்ற சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காமல், அண்ணி, அக்கா வேடத்தில் முழு மூச்சாக நடித்தால் விஜயலட்சுமிக்கு தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் உண்டு என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.

வழி பிறக்கட்டும்
இந்த கத சொல்லப் போறோம் படத்தின் மூலமாவது மீண்டும் சினிமாவில், நடிப்பில் விஜயலட்சு பிசியாகி, அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெறட்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

சரி அது என்ன கத சொல்லப் போறோம்...
இப்படத்தில் ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, முன்டாசுப்பட்டி காளி, பசங்க சிவகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை ,திரைக்கதை ,வசனம் எழுதி இயக்குகிறார் - எஸ்.கல்யாண்.


Click it and Unblock the Notifications











