நான் குழந்தை பெத்துக்க கூடாதுனு முடிவெடுக்க இதுதான் காரணம்.. கலங்கி பேசிய நடிகை!

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் விஜயசாந்தி. அரசியலில் இருந்து கொண்டே சினிமாவில் நடித்து வரும் விஜயசாந்தி, திருமணமாகி பல ஆண்டுகள் ஆன போதும், குழந்தை பெற்றுக்கொள்ளாததற்கான காரணத்தை முதன்முதலாக பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார்.

பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் விஜயசாந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி படத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் நடித்த வைஜெயந்தி ஐபிஎஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் ஒரு துணிச்சலான பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து பல படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் விஜயசாந்தி.

vijayashanthi interview

நடிகை விஜயசாந்தி: இவர், சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, 1996 ஆம் ஆண்டு அதிமுகவுக்கு ஆதரவளித்து, ஜெயலலிதாவின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்தார். அதன்பின், 1998 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதன்பின் 2004 ஆம் ஆண்டு பி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்தார். தற்போது காங்கிரஸில் உள்ளார்.அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர், சினிமா வாழ்க்கை குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

இதுதான் காரணம்: அதில், திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆன போதும். குழந்தை பெற்றுக்கொள்ளாதது குறித்து பேசி உள்ளார்.குழந்தைன்னா யாருக்கு தான் பிடிக்காது, குழந்தையை பெத்தக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுவாள். ஏன்னா ஒரு பெண்ணுக்கு அதான் ரொம்ப முக்கியமான விஷயம். எனக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும். ஒரு ஸ்டேஜ்ல, அந்த விஷயத்தை பத்தி நான் ரொம்ப யோசித்தேன். ஆனால், எங்கேயோ ஒரு இடத்துல எனக்கு குழந்தைங்க இருந்தா, தெலுங்கானாவில் அதை வைத்து என்னை பிளாக்மெயில் பண்ணுவாங்கன்னு சந்தேகம் எனக்கு வந்தது.

மக்கள் தான் என் குழந்தைகள்: ஏன்னா அது சாதாரண விஷயம் கிடையாது. ஒரு மாநிலத்துல, அப்ப இருந்த சூழ்நிலையில, ஒரு விஷயத்துக்காக நாம சண்டை போட்டுட்டு இருக்கும்போது. எது வேணாலும் பண்ணுவாங்க என்று எனக்கு தோணுச்சு. ஆண்களுக்கு இது ஓகே பெண்களுக்கு கொஞ்சம் டஃப்பான விஷயம் தான் அது. இந்த விஷயத்தை பத்தி நான் ரொம்ப யோசிச்சேன். இது வேற எங்கேயோ போய் முடியும் என்று எனக்கு தோணுச்சு. இதனால், குழந்தைகளை வேண்டாம் என்று நான் முடிவு பண்ணிட்டேன். மக்கள் தான் என்னுடைய குழந்தைகள் என்று நான் நினைச்சேன்.இந்த விஷயத்தை என்னுடைய கணவரிடமும் சொன்னேன் அவரும் என்னுடைய முடிவை ஏற்றுக் கொண்டார் என்று விஜயசாந்தி அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X