கன்னத்தில் அறைந்த பாரதிராஜா.. விருட்டென கிளம்பிய விஜயசாந்தி.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
ஐதராபாத்: நடிகை விஜயசாந்தி தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டவர். இவரது படங்கள் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவை. 70களின் இறுதியில் நடிக்க வந்தாலும் 80 மற்றும் 90களின் காலகட்டங்களில் தன்னை மிகச்சிறப்பான நடிகையாக வெளிப்படுத்தினார் விஜயசாந்தி.
தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள விஜயசாந்தி தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் மன்னன் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். இவரது கேரக்டர் இந்தப் படத்தில் ரஜினிக்கு மிகப்பெரிய டஃப் கொடுத்தது. இந்தப் படத்தில் நடிகை குஷ்பூவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

நடிகை விஜயசாந்தி: நடிகை விஜயசாந்தி தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டவர். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ள நடிகை விஜயசாந்தி, தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் மன்னன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவரை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அவர் ஈடுபடுவதாகவும் அதை சூப்பர்ஸ்டார் முறியடிப்பதாகவும் இந்தப் படத்தின் கதைக்களம் காணப்பட்டது. இருந்தபோதிலும் இந்தப் படத்தில் தன்னுடைய நடிப்பால் அவர் ரஜினிகாந்தை முறியடித்ததாகவே அப்போது விமர்சிக்கப்பட்டது.

வைஜெயந்தி ஐபிஎஸ் படம்: இந்தப் படம் மட்டுமில்லாமல் விஜயசாந்தியின் கேரியர் பெஸ்ட் படமாக வைஜெயந்தி ஐபிஎஸ் படம் கடந்த 1990ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் அவரை டாப் ஹீரோயினாக மாற்றியது. இந்தப் படத்தில் ஆக்ஷன் நாயகியாக அதிரடி காட்டியிருந்தார் வைஜெயந்தி. அவருக்கு பிறகு 30 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரை போன்ற அதிரடி நாயகி யாரும் உருவாகவில்லை. சினிமாவிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்ட விஜயசாந்தி, மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது தன்னுடைய படங்கள் குறித்தும் ரசிகர்களின் வரவேற்பு குறித்தும் பல விஷயங்களை தனது பேட்டியொன்றில் விஜயசாந்தி பேசியுள்ளார்.

ஒரு வருடத்தில் 17 படங்கள்: தான் ஒரு வருடத்தில் 17 படங்களில் நடித்துள்ளதாகவும். இது பல ஆண்டுகள் தொடர்ந்ததாகவும் விஜயசாந்தி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். தன்னை எப்போதும் தான சூப்பர்ஸ்டாராக நினைத்ததில்லை என்றும் தன்னுடைய வேலை என்ன என்பதிலும் எப்படி ரசிகர்களை திருப்திபடுத்தலாம் என்பது குறித்துமே தான் அதிகமாக யோசித்ததாகவும் விஜயசாந்தி தெரிவித்துள்ளார். தன்னுடைய சிறுவயதில் தன்னுடைய குடும்பத்தினர் மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக இருந்ததாகவும் ஆனால் பெரியவளான பிறகு அந்த கண்டிப்புதான் தனக்கு மிகப்பெரிய அளவில் உதவி புரிந்ததாகவும் விஜயசாந்தி கூறியுள்ளார்.

பாரதிராஜா செலக்ஷன்: தனக்கு படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்ததாகவும் ஆனால் நடிகையாக வேண்டும் என்றெல்லாம் தான் நினைத்ததில்லை என்றும் கூறியுள்ள விஜயசாந்தி, ஆனால் தன்னுடைய அப்பா தான் மிகப்பெரிய நடிகையாக மாற வேண்டும் என்று நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். கல்லுக்குள் ஈரம் படத்தில் பாரதிராஜா தன்னை ஹீரோயினாக நடிக்க வைத்தது குறித்தும் விஜயசாந்தி பேசியுள்ளார். அவர் தன்னுடைய படத்திற்காக நாயகியை தேடிவந்த நிலையில், அவரது கார் வழியில் பஞ்சரான நிலையில், பக்கத்தில் இருந்த ஸ்டூடியோவில் சென்று அவர் காத்திருந்ததாகவும் அப்போது தன்னுடைய புகைப்படத்தை பார்த்து தன்னை செலக்ட் செய்ததாகவும் விஜயசாந்தி கூறியுள்ளார்.
கன்னத்தில் அறைந்த பாரதிராஜா: படத்தின் ஒரு காட்சியில் தான் செய்யாத தவறுக்காக காட்சி சரியாக வரவில்லை என்று கூறி அவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும் இதனால் கோபத்துடன் தான் அங்கிருந்து கிளம்பியதாகவும் இதையடுத்து அவரது உதவியாளர்கள் தனக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி தன்னை கன்வின்ஸ் செய்ததாகவும் விஜயசாந்தி கூறியுள்ளார். இந்தப் படத்தில் கமிட்டானபோது அவரு வயது 13. தமிழ் படங்களில் நடிக்க தனக்கு அதிகமாக பிடிக்கும் என்றும் ஆனால், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்ததால் தன்னால் அதிகமாக தமிழில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் விஜயசாந்தி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











