இப்போ நடிகைகளின் உடை எல்லாம் எல்லை மீறி போயிடுச்சு.. பாலு மகேந்திரா பட ஹீரோயின் ஓபன் பேட்டி!
சென்னை: பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வெளியான வண்ண வண்ண பூக்கள் படத்தில் வெறும் சட்டையை மட்டும் அணிந்துக் கொண்டு தொடையழகை காட்டி நடித்து 90களிலேயே தமிழ் சினிமா ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை வினோதினி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது திரை அனுபவம் குறித்து பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.
இயக்குநரும் நடிகருமான விசு இயக்கத்தில் வெளியான மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வினோதினி சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல சினிமா ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்த அனுபவங்கள் பற்றி பேசியுள்ளார்.

இந்த காலத்து நடிகைகள் அணியும் உடைகள் குறித்தும், சினிமாவில் அதெல்லாம் சகஜமான ஒன்று என்றும் எங்களுக்கு முன்னாடியே சில நடிகைகள் தாராளம் காட்டி நடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
பேபி லட்சுமி: மணல் கயிறு படத்தில் பேபி லட்சுமி எனும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் வினோதினி. 1982ம் ஆண்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் புதிய சகாப்தம், மண்ணுக்குள் வைரம், நாயகன் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 1991ம் ஆண்டு பதின்ம பருவத்தில் இருக்கும் போதே சித்திரை பூக்கள் படத்தில் நாயகியாக அறிமுகமானார் வினோதினி.

பாலுமகேந்திரா படத்தில்: 1992ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் பிரசாந்த் நடித்த வண்ண வண்ண பூக்கள் படத்தில் வெறும் சட்டை மட்டுமே அணிந்து அவர் நடித்த நடிப்பை பார்த்து 80ஸ் கிட்ஸ் எல்லாம் பெருமூச்சு விட்டு ரசித்தனர். இந்நிலையில், சமீபத்தில், அளித்த பேட்டியில் பாலுமகேந்திரா சார் படத்தில் நடித்த அனுபவங்கள் எல்லாம் மறக்கவே முடியாத பொக்கிஷம் என்றார்.
இப்போ ஹீரோயின்களின் உடை: வெறும் சட்டை மட்டுமே அணிந்துக் கொண்டு நடித்தது எனக்கு பெரிய பிரச்சனையாகவே தெரியவில்லை. அப்போதே இந்தியில் ஜீனத் அமன் அதை விட படுமோசமாக எல்லாம் நடித்து விட்டார். இப்போது படங்களில் ஹீரோயின்கள் எல்லாம் உடுத்திக் கொண்டு நடிக்கும் உடைக்கு அந்த டிரெஸ் எவ்வளவோ பரவாயில்லை என்று தான் சொல்வேன் என்றார்.

என்ன டிரெஸ் போட்டாலும்: அப்போது, அந்த ஆடை குறித்த விமர்சனங்கள் எழுந்ததா? என்கிற கேள்விக்கு என்ன டிரெஸ் போட்டாலும் விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டு தான் இருப்பார்கள். ரசிப்பவர்கள் ரசித்துக் கொண்டு தான் இருப்பார்கள். சேலை அணிந்து நடித்தாலும், அதையும் கடுமையாக விமர்சிப்பவர்கள் உள்ளனர். சுடிதார் அணிந்து வந்தாலும், மோசமாக கமெண்ட் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என வெளிப்படையாக பேசியுள்ளார். சினிமாவை தாண்டி சின்னத்திரை தொடர்களிலும் அதிகம் நடித்து ரசிகர்கள் மத்தியில் என்றுமே நீங்காத இடத்தை பிடித்திருக்கும் வினோதினி மீண்டும் நடிக்க ஆர்வம் செலுத்தி வருவதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











