அட விருமாண்டி அபிராமி மகளா இவங்க?.. ஆனா ஒரு ட்விஸ்ட்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: அபிராமி விருமாண்டி படத்தின் மூலம் பிரபலமானவர். அந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அவர் அதற்கு பிறகு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென திருமணம் செய்துகொண்டு வெளிநாடு சென்று செட்டிலாகிவிட்டார். அது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது . சூழல் இப்படி இருக்க 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்போது பிஸியாக நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவரது மகளீன் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அபிராமி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். 1995ஆம் ஆண்டு வெளியான காத்தபுருஷன் என்ற படத்தின் மூலம்தான் அவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பத்ரம், ஸ்ரதா, மில்லினியம் ஸ்டார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிகையாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

Actress Virumandi Abirami Daughter Photo Goes Trending on Social Media

தமிழில் அறிமுகம்: சூழல் இப்படி இருக்க 2001ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அபிராமி. படம் டீசண்டான வரவேற்பையே பெற்றது. அபிராமியின் நடிப்பும் கவனம் ஈர்த்ததன் காரணமாக அவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நல்ல நடிகை: தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் தன்னை ஒரு நல்ல நடிகையாக அடையாளப்படுத்திக்கொண்டார். கோலிவுட்டும் அபிராமிக்கு அழகு மட்டும் இல்லை திறமையும் இருக்கிறது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் அபிராமிக்கு எளிதில் யாருக்கும் கிடைத்திடாத மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

அன்னலட்சுமி: கமல் ஹாசன் நடிப்பில் உருவான விருமாண்டி படத்தில் அபிராமிக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் அவர். கமல் ஹாசனுடன் நடிக்கும்போது அவருக்கு ஈடுகொடுத்து நடிப்பது அவ்வளவு சாதாரணமில்லை. அதனை விருமாண்டியில் மிகச்சாதாரணமாக செய்தார். மதுரை ஸ்லாங்கை பேசி தைரியமான பெண்மணியாக நடித்து அப்ளாஸை அள்ளினார் அபிராமி.

ஒதுங்கிய அபிராமி: விருமாண்டி படத்துக்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அபிராமி எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. அபிராமி சினிமாவிலிருந்து ஒதுஞ்கியதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன.

ரீ என்ட்ரி: ஒருவழியாக பத்து வருடங்கள் கழித்து 36 வயதினிலே படத்தின் ரீ என்ட்ரி கொடுத்தார் அபிராமி. அதிலிருந்து தொடர்ந்து நடித்துவரும் அபிராமி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்திலும் அவர் கமிட்டாகியிருக்கிறார். அதேபோல் Once upon Time in Madras படத்திலும் நடித்திருக்கிறார் அபிராமி.

ட்ரெண்டாகும் புகைப்படம்: இந்நிலையில் அபிராமியின் மகள் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் நடிகை அபிராமி, அவரது கணவர் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவரை அபிராமி தத்து எடுத்து வளர்ப்பதாக தகவல் ஒன்று ஓடுவது குறிப்பிடத்தக்கது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அபிராமியின் மகள் செம க்யூட்டாக இருக்காரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X