யாராவது இவங்களுக்கு சேலை கட்ட சொல்லிக்கொடுங்க.. பிரபல நடிகையை அப்படி கலாய்க்கும் ரசிகர்கள்!

By

சென்னை: தனது அம்மாவின் சேலையை அணிந்து கிளாமராக பிரபல நடிகை எடுத்துள்ள புகைப்படங்களை ரசிகர்கள் விளாசியுள்ளனர்.

தமிழில், செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் வாமிகா கப்பி.

அடுத்து அஸ்வின் சரவணன் இயக்கிய இறவாக்காலம் என்ற படத்தில் நடித்தார். இதில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நடித்திருந்தனர்.

நடிகர் பிருத்விராஜ்

நடிகர் பிருத்விராஜ்

இந்தப் படம் முடிந்துவிட்டாலும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பஞ்சாபி நடிகையான இவர், இந்தியில் சிக்ஸ்டீன் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் சுதிர்பாபு ஹீரோவாக நடித்த பாலே பஞ்சு ரோஜு என்ற படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் கோதா, நடிகர் பிருத்விராஜ், மம்தா மோகன்தாஸ் ஆகியோருடன் நைன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இவர், கதக் நடனக் கலைஞருடன் கூட. பஞ்சாபியில், பாடகர் யோ யோ ஹனிசிங்குடன் து மேரா 22 மேன் தேரா 22 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து அங்கு தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், லாக்டவுனால் வீட்டில் இருக்கும் நடிகை வாமிகா, அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அம்மாவின் புடவை

அம்மாவின் புடவை

அவர் இப்போது வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படங்கள் ஏராளமான லைக்ஸ்களை அள்ளியுள்ளது. பல ரசிகர்கள், அதற்கு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அம்மாவின் புடவையை அணிந்து எடுத்துள்ள புகைப்படம் இது என்று கூறியுள்ளார் வாமிகா. இதற்கு சிலர் நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

எப்படி பொருந்தும்?

எப்படி பொருந்தும்?

ஒருவர், இந்த மாதிரி உடை அணிந்து நான் யாரையுமே பார்க்கலை. அருமையா இருக்கு என்று கலாய்த்துள்ளார். உங்கள் கண்கள் கொல்கின்றன என்று சிலரும் இந்த டிரெஸ்ல வேற லெவல்ல இருக்கீங்க என்று சிலரும் கூறியுள்ளனர். ஒருவர், உங்க இமேஜூக்கு இந்த டிரெஸ் பொருந்தலை. இப்படி டிரெஸ் போட்டு, யாரை திருப்திப்படுத்தப் போறீங்க? முதல்ல இதை மாத்துங்க' என்று கோபமாகத் தெரிவித்துள்ளார்.

தேவையில்லை

தேவையில்லை

இன்னும் சில ரசிகர்கள் அவரை விளாசியுள்ளனர். 'உங்க படங்கள் மூலம் ஹோம்லியாகத்தான் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற போட்டோ உங்களுக்கு தேவையில்லை. இனி இப்படி அப்லோட் பண்ணாதீங்க..இது ரெக்யூஸ்ட் என்று தெரிவித்துள்ளனர். இப்படி போட்டோ போட்டு வெப்சீரிஸ் வாய்ப்பு தேடறீங்களா? என்று சிலர் கேட்டுள்ளனர்.

சொல்லிக் கொடுங்க

சொல்லிக் கொடுங்க

இன்னொருவர் பெண்களுக்கு சேலைதான் அழகு, ஆனால், அதை இப்படி அணியக்கூடாது என்று தெரிவித்துள்ளார். 'யாராவது சேலை உடுத்தச் சொல்லிக்கொடுங்கம்மா, இந்த நடிகைக்கு' என்று சிலர் கூறியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் அவர் அழகை வர்ணித்துள்ளனர். ஏன் நீங்க மட்டும் இவ்வளவு அழகா இருக்கீங்க? என்று சிலர் கேட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X