யாஷிகாவின் அந்த நாலு போட்டோவும் மஜாவா இருக்கு.. ஏக்கத்தில் வாடும் பேன்ஸ்!
சென்னை: பஞ்சாப் மாடல் அழகியான நடிகை யாஷிகா ஆனந்த், மொத்தமாக தமிழ் பெண்ணாகவே மாறி அட்டகாசமான பாவாடை தாவணியில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, பலரின் தூக்கத்தை கொடுத்துள்ளார். இந்த போட்டோவிற்கு ரசிகர்களிடம் லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.

சினிமாவில் அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிசியான நடிகையாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த். திரை துறையில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதில் குறியாக இருக்கக் கூடிய இவர் ரசிகர்களை எப்போதும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அதீத கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

நடிகை யாஷிகா ஆனந்த்: ரஹ்மான் நடித்த துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர், அந்த படத்தைத் தொடர்ந்து கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் காவ்யா கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி போன்ற படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்தார்.

பிக் பாஸில்: பின் பாஸ் பாஸில் பங்கேற்ற இவர், குட்டி குட்டி கவர்ச்சி ஆடைகளை அணிந்து, டீன் ஏஜ் பாய்ஸின் பேவரைட் ஹீரோயினாக மாறினார். அந்த நிகழ்ச்சிக்கு பின் வெளியே வந்த இவர் கார் விபத்தில் சிக்கினார். பாண்டிச்சேரி பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டது. இதில், யாஷிகாவின் தோழி உயிரிழந்தார். கடுமையாக காயமடைந்து படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா, பல மாத போராட்டத்திற்கு பிறகு அதில் இருந்து மீண்டு வந்தார்.

ஏக்கத்தில் பேன்ஸ்: தற்போது, சோஷியல் மீடியாவில் மூச்சு முட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக கொக்கி போட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கக் கூடிய யாஷிகா ஆனந்த் தற்போது ரசிகர்களை வளைத்துப்போட பாவாடை தாவணியில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த பேன்ஸ் அய்யோ, இந்த அடக்கமும் நல்லாத்தான் இருக்கிறது என்று கருத்துக்களை பகிர்ந்து தேவையான லைக்குகளை அள்ளித் தந்து தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக இப்படம் மாறிவிட்டது.



Click it and Unblock the Notifications











