Yashika Anand: இடுப்பில் கையை வெச்சு.. புடவையில் ரசிகர்களை கிறங்க வைத்த யாஷிகா ஆனந்த்!

சென்னை: மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் தற்போது, இவன் தான் உத்தமன், ராஜ பீமன் படத்திலும் மேலும் இரண்டு படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார். என்னத்தான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தன்னை வாழவைத்த இன்ஸ்டா ரசிகர்களை மறந்துவிடக்கூடாது என்று தொடர்ந்து அவர்களுக்கு போட்டோக்களை வெளியிட்டு மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறார் யாஷிகா.

பஞ்சாமி குடும்பத்தை சேர்ந்த யாஷிகா ஆனந்த், டெல்லியில் பிறந்தார். அவரது குடும்பம் மாற்றலாக சென்னைக்கு வந்ததைத் தொடர்ந்து சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். மாடலிங்கில் ஈடுபாடு கொண்ட இவர் சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, ஜீவா நடித்த கவலை வேண்டாம் படத்தில் சின்ன ரோலில் நடித்தார். அதன்பின் துருவங்கள் பதினாரு படத்தில் இவருக்கு நல்ல ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த ரோல் மக்கள் மனதில் பதியவில்லை.

yashika aannand instagram

யாஷிகா ஆனந்த்: இதைத்தொடர்ந்து, நடிகை யாஷிகா ஆனந்த், இருட்டு அரையில் முரட்டு குத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இரட்டை அர்த்த வசனம் கொண்ட அந்த படம் நடிகை யாஷிகாவிற்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அப்படத்தினை தொடர்ந்து மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி போன்ற படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்தார். பின், பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த வீட்டில் கவர்ச்சி உடையில் வலம் வந்து , டீன் ஏஜ் பாய்ஸின் பேவரைட் ஹீரோயினாக மாறினாலும் அவரால், வெற்றிப்பெற முடியவில்லை என்றாலும், யாஷிகாவை அவரது ரசிகர்கள் ஓட்டு போட்டு காப்பாத்தி 98 நாட்கள் இருக்க வைத்தனர். இதையடுத்து யாஷிகா 5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

கார் விபத்து: இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த யாஷிகா, 2021 கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த படுத்த படுக்கையாக இருந்தார். பின் அதிலிருந்து மீண்டு குணமடைந்த யாஷிகா தீவிர சிகிச்சைக்கு பின் திரும்பவும் நடிக்க ஆரம்பித்தார். இவர் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

கிறங்க வைத்த யாஷிகா: இன்ஸ்டாகிராமில் நான்கு புள்ளி ஒரு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் யாஷிகா ஆனந்த், சோஷியல் மீடியாவில் மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சி புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக கொக்கி போட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கக் கூடிய யாஷிகா ஆனந்த், இடுப்பில் கையை வைத்துக்கொண்டு புடவையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு அவரது ரசிகர்கள் இதயத்தை பரிசாக அளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X