சன்னி லியோன்லாம் ஓரமா போங்க.. எங்க தலைவி வந்துட்டாங்க.. யாஷிகாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: யாஷிகா ஆனந்தின் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சன்னி லியோனெல்லாம் எந்த மூலைக்கு என கேட்டுள்ளனர்.

யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.

குறிப்பாக கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Recommended Video

யாஷிகா ஆனந்த் New Workout - வீடியோ

முதிர்ச்சி பேச்சு

முதிர்ச்சி பேச்சு

கடைசியாக அவரது நடிப்பில் ஸாம்பி என்ற படம் ரிலீஸானது. தற்போது யாஷிகா ஆனந்த், இவன் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடித்து வந்தாலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பெரும் பிரபலமானார் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தனது முதிர்ச்சியான பேச்சால் மக்கள் மனதை கவர்ந்தார்.

ஜொள்ளு

ஜொள்ளு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு கழுகு 2, ஸாம்பி ஆகிய படங்கள் அவரது நடிப்பில் வெளியாகியுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த யாஷிகா, ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்க தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது கவர்ச்சி போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் சிலர் ஜொள்ளு விட்டு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

வைரல் போட்டோ

அதேநேரத்தில் சிலர் அவர் ஆடைக்குறைப்பை பார்த்து துப்பாத குறையாக திட்டி தீர்க்கின்றனர். ஆனாலும் அதனை பொருட்படுத்தாத யாஷிகா ஆனந்த் நாளுக்கு நாள் தனது கவர்ச்சியை கூட்டி வருகிறார். யாஷிகாவின் கவர்ச்சி போட்டோக்கள் சமூக வலைதளங்களை சூடாக்கி வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

ஓரமா போங்க

கறுப்பு நிற சேலை போன்ற வித்தியாசமான உடையில் கிறங்கடித்துள்ளார் யாஷிகா ஆனந்த். ஒரு பக்கம் மட்டுமே ஸ்லீவ் கொண்ட அந்த உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். அதனை பார்த்த நெட்டிசன்கள், அவரது அழகை வர்ணித்துள்ளனர். அதோடு உங்களைப் போல் யாருமில்லை, சன்னி லியோன் எல்லாம் ஓரமாக போக வேண்டியதுதான் என்று கூறியுள்ளனர்.

பிளாக் பியூட்டி

பிளாக் பியூட்டி

இன்னும் சிலர் யாஷிகா ஆனந்தை மியா காலிஃபா என்றும் அழைத்து வருகின்றனர். மேலும் பங்கம் தலைவி என்றும், பிளாக் பியூட்டி, செம்ம கட்டை என்றும் புகழ்ந்து வருகின்றன. அதோடு ஆசம், க்யூட், செக்ஸி, ஹாட் என்று வார்த்தைகளால் வர்ணித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பிளாக் பியூட்டி என்றும் கறுப்பு உடையில் செம அழகாக இருக்கிறீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X