சன் டிவி சீரியலில் நடிக்கும் யாஷிகா ஆனந்த்.. எந்த சீரியல்.. எவ்ளோ சம்பளம்னு பாருங்க மக்களே!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் கமிட்டாகி உள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் உட்பட அனைத்து படப்பிடிப்புளும் ஸ்தம்பித்தது.
இதனால் சீரியல்களை நம்பியே பொழுதை ஓட்டிய சேனல்கள் கையிருப்பில் இருந்த சில எபிசோடுக்களை ஜவ்வாய் இழுத்து சில நாட்களை ஓட்டின. அதுவும் தீர்ந்து போனதால் படங்களை போட்டு நேரத்தை சரிக்கட்டி வந்தன.

சீரியல் அனுமதி
அதுவும் வேலைக்கு ஆகாமல் போனதால் பழைய எபிசோடுகளை போட்டு ஒப்பேத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து சீரியல் படப்பிடிப்புகளை மளமளவென தொடங்கினர் சீரியல் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்.

ரோஜா சீரியல்
நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்புகள் தொடங்கியதால் அவற்றை இன்னும் சுவாரசியமாக கொடுக்க முடிவு செய்திருக்கின்றனர் இயக்குநர்கள்.அந்த வகையில் சன் டிவி சீரியல்களில் டாப்பில் உள்ள சீரியலான ரோஜா சீரியலில் அதிரடி காட்டியிருக்கிறார் அதன் இயக்குநர்.

ரோஜா சீரியலில் யாஷிகா
அதாவது ரோஜா சீரியலில் திரைப்பட நடிகை மற்றம் பிக்பாஸ் புகழ் மற்றும் யாஷிகாக ஆனந்த்தை கமிட் செய்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில், பிரியங்கா நல்கரி, சிப்பு சூரியன், வடிவுக்கரசி, ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

டூ விலரில் சென்று..
இந்நிலையில் இந்த சீரியலில் புதிய திருப்பமாக யாஷிகா ஆனந்த் இணைந்துள்ளார். யாஷிகா ஆனந்த் நடிக்கும் சில காட்சிகள் அண்மையில் ஷுட் செய்யப்பட்டுள்ளது. அதில் நாயகனான அர்ஜூனுடன் யாஷிகா ஆனந்த் டூ வீலரில் செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

வரும் எபிசோடுகளில்
ரோஜா சீரியலில் நடிக்க யாஷிகா ஆனந்த் ஒரு எபிசோடுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. அவர் கெஸ்ட் ரோலில் அந்த சீரியலில் நடிக்கிறாரா அல்லது அவரது கேரக்டர் தொடருமா என்ற தகவல் இல்லை. ஆனால் புதிதாக ஒளிபரப்பாகும் ஒரிஜினல் எபிசோடுகளில் யாஷிகா ஆனந்த் நடித்த காட்சிகள் நிச்சயம் இருக்கும் என கூறப்படுகிறது.

வாய்ப்புகள் கிடைக்கவில்லை
யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் சொல்லும் படி ஒரு படமும் இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலம் ஆன யாஷிகாவுக்கு அதன் பிறகு எதிர்ப்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











