Don't Miss!
- News
மதில் மேல் பூனையாக பாஜக.. ‘சுத்து’ போடும் ஓபிஎஸ், ஈபிஎஸ்! டெல்லியில் திரளும் லீடர்கள்!
- Lifestyle
ஆண்கள் மனைவியை தவிர்த்து வேறு பெண்ணை விரும்ப சாணக்கியர் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
- Automobiles
கொள்ளை அழகு... இந்த கார்கள் மட்டும் சாலைக்கு வந்துச்சு எல்லோரட கண்களும் அது மேலதான் இருக்கும்...
- Sports
காவ்யா மாறன் அழகில் மயங்கிய வெளிநாட்டு ஆண்கள்.. கல்யாணம் பண்ணிக்குங்க என கெஞ்சல்.. வீடியோ
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Technology
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
படவாய்ப்புக்காக இப்படியா?அட்டை விளம்பரத்தில் அரைகுறை ஆடையுடன் யாஷிகா போஸ்!
சென்னை : இன்ஸ்டா கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்த், அட்டை விளம்பரத்திற்காக படுமோசமான உடையில் போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களை முகம் சுளிக்கவைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஓவர் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.
கவர்ச்சி கன்னியாக வலம் வரும், யாஷிகாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க ரகுமானின் துருவங்கள் 16, விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, யோகி பாபுவுடன் ஜாம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தங்க
தாரகையாக
மின்னும்
நடிகை
சிம்ரன்..
லேட்டஸ்ட்
புகைப்படம்
பார்த்து
வர்ணித்து
புகழும்
ரசிகர்கள்!

யாஷிகா ஆனந்த்
ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த யாஷிகா ஆனந்த், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமானார். இதையடுத்து, ஏராளமான திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வாசல் கதவை தட்டியதை அடுத்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

விபத்தில் சிக்கினார்
கடந்த ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது மோசமான விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில், யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, 3 மாதங்களுக்கு மேல் படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.

கவர்ச்சியில் தாராளம்
விபத்திற்கு பிறகு மீண்டும், சமூக வலைதளங்களில், ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தாண்டவமாடும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே தனியாக யாஷிகா பேன்ஸ் இருக்கிறார். இருந்தாலும், இவரின் படுமோசமான கவர்ச்சியை பார்த்து சிலர் திட்டியும் வருகின்றனர்.

முகம் சுளிக்கும் ரசிகர்கள்
தற்போது, யாஷிகா ஆனந்த் showreel magazine என்ற வார இதழின் அட்டை படத்திற்காக நீச்சல் குளத்தில் தண்ணீரில் நனைந்தபடி ஈரம் சொட்ட சொட்ட பிகினியில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலர் ஏக்க பெருமூச்சு விட்டாலும் சிலரை முகம் சுளிக்கவைத்துள்ளது. பட வாய்ப்பு வர வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் செய்யலாமா? என நெட்டிசன்ஸ் கேட்டுவருகின்றனர்.