Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பெற்றோரின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்.. யாஷிகா மகிழ்ச்சி.. வாழ்த்தும் ரசிகர்கள் !
சென்னை : நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றிவிட்டதாக மகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஓவர் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.
கவர்ச்சி கன்னியாக வலம் வரும், யாஷிகாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க ரகுமானின் துருவங்கள் 16, விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, யோகி பாபுவுடன் ஜாம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு
அம்மா
வரவில்லை..
ஆசி
வாங்க
கொச்சி
பறந்த
நயன்தாரா
-
விக்னேஷ்
சிவன்
ஜோடி!

பிக் பாஸ் சீசன் 2
ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த யாஷிகா ஆனந்த், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமானார். இதையடுத்து, ஏராளமான திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வாசல் கதவை தட்டியதை படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

மோசமான விபத்து
இதையடுத்து, கடந்த ஆண்டு. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது மோசமான விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 மாதங்களுக்கு மேல் படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.

பெற்றோரின் கனவு
விபத்திற்கு பிறகு மீண்டும், சமூக வலைதளங்களில், ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டு சாவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், சொந்த வீடு வாங்கி, என் அம்மா அப்பாவின் கனவை நான் நிறைவேற்றுவேன் என என் வாழ்வில் ஒருபோதும் நினைத்ததே இல்லை.

யாஷிகா மகிழ்ச்சிப்பதிவு
இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவரிடமும் மிக தாமதமாகப் பகிர்ந்துகொள்வதற்கு மன்னிக்கவும். கொரோனா மற்றும் நான் சந்தித்த மோசமான விபத்தால், இந்த வீட்டுக்குள் வரமுடியாமல் போனது. தற்போது தான் வீட்டிற்குள் வருவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. இப்போது தான் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என மிகவும் நெகழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் யாஷிகா ஆனந்த்.
Recommended Video

ஜூன் 24ந் தேதி ரிலீஸ்
இயக்குநர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ். ஜே சூர்யாவுக்கு ஜோடியாக 'கடமையை செய்' திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூன் 24ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.