என்ன யாஷிகா இதெல்லாம்.. சிரிப்பை அடக்க முடியலடா சாமி.. கிண்டலடிக்கும் பேன்ஸ்!
சென்னை: (நடிகை யாஷிகா ஆனந்த்தின் அழகிய போட்டோ) இன்ஸ்டாகிராமில் நான்கு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் எந்த போட்டோவை ஷேர் செய்தாலும் அதற்கு லைக்குகள் மலைபோல் குவியும். ஆனால், தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாக அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த். 2018 கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார்.

அந்த படத்தில் கவர்ச்சியில் மிரட்டும் யாஷிகா ஆனந்த்க்கு தனி ரசிகர்கள் இருந்தனர் . பின் அதே கவர்ச்சியை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார். பின் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து வெகுஜன மக்களுக்கும் பிடித்த நடிகையானார்.
நடிகை யாஷிகா ஆனந்த்: இதையடுத்து, கடந்த 2021 ம் ஆண்டு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது கார் நிலை தடுமாறி சாலை நடுவே இருக்கும் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். கார் ஓட்டிய யாஷிகா பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சையில் இருந்து குணமடைந்து வர ஒருபுறம் ரசிகர்கள் யாஷிகாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் விபத்தின் அடிப்படையில் யாஷிகா மீது, அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைவசம் உள்ள படங்கள்: இந்த விபத்தில் இருந்து பூரண குணமடைந்த யாஷிகா தற்போது திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கைவசம் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஒருபடம் என கணிசமான படங்களை வைத்து இருக்கிறார். எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக கடமையை செய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் சஸ்பென்ஸ் ஜானரில் உருவாகியுள்ள சில நொடிகளில் படத்தில் நடித்திருந்தார்.
கிண்டலடிக்கும் பேன்ஸ்: இந்நிலையில் இணையத்தில் எப்போதும் விதவிதமான போட்டோவை அப்லோடு செய்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த், பிங்க் நிற உடையில் தனது பின்னழகை மொத்தமும் காட்டி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த போட்டோவை வடிவேலுவின் ஒரு காமெடியுடன் ஒப்பிட்டு கிண்டலடித்து வருகின்றனர். தற்போது, இந்த மீம்ஸ் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











