யாஷிகாவா இது... அடையாளமே தெரியலையே… இப்படி ஆய்ட்டாங்களே !
சென்னை : நீண்ட நாட்களுக்கு பிறகு யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மாடலான யாஷிகா, கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.
இதையடுத்து, ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கினார்.

யாஷிகா
கவர்ச்சி கன்னியாக வலம் வந்து இளசுகளில் இதயத்தில் தனி இடம் பிடித்தார் யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இந்த வீட்டில் குட்டி குட்டி பவுசர் போட்டுக்கு ரசிகர்களை ஏக்க பெருமூச்சுவிடவைத்தார். இதனால், யாஷிகாவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது.

பிக்பாஸ் வீட்டில்
பிக் பாஸ்வீட்டிலிருந்து வெளியே வந்த இவருக்கு பட வாய்ப்புகள் வந்த அதில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார். புதுச்சேரியில் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு, சென்னை திரும்பிக்கொண்டு இருக்கும் போது கார் விபத்துக்குள்ளனது.

காலில் முறிவு
இந்த கோர விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகாவுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் பிழைத்தார். இருப்பினும் காலி ஏற்பட்ட முறிவு காரணமாக கடந்த 3 மாதங்களாக எழுந்து நடக்க முடியாது படுக்கையிலே ஓய்வு எடுத்து வருகிறார்.

பலமுறை சிகிச்சை
அவருக்கு பலமுறை அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றன. தற்போது காயங்கள் ஆறி வரும் நிலையில், 3 மாதங்கள் வாழ்நாள் போராட்டத்திற்கு பிறகு யாஷிகா, முதல் அடி எடுத்து வைக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
Recommended Video

லேட்டஸ்ட் போட்டோ
இந்நிலையில், தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு மேக்கப் போட்டுக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் இதுவா யாஷிகா என்று கேட்கும் அளவுக்கு அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கிறார் யாஷிகா. அந்த புகைப்படத்திற்கு தலைப்பாக 'சில நேரங்களில் ஒரு கணம் நினைவாக மாறும் வரை அதன் மதிப்பை நீங்கள் அறிய மாட்டீர்கள்' என பதிவிட்டுள்ளார் இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











