கவரே பண்ணல.. கவர் போட்டோங்கறீங்க.. யாஷிகாவின் போட்டோவை பார்த்து கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

YASHIKA ANAND INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை: நடிகை யாஷிகாவின் புதிய போட்டோ ஷுட்டையும் அவரது கேப்ஷனையும் பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டுக்குத்து, பாடம், நோட்டா, ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக அவரது நடிப்பில் ஸாம்பி படம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.

நேர்மையான நட்பு

படங்களில் நடித்ததைக் காட்டிலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பெரும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான மகத் மீது காதல் கொண்டார். மகத்துக்கு ஏற்கனவே காதலி இருப்பது தெரிந்தும் அவரை காதலித்தார். இதனால் சர்ச்சைக்கு ஆளானார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் தனக்கு தோஷியான ஐஸ்வர்யா தத்தாவுடன் நேர்மையான நட்பு கொண்டார்.

ஒரு சில படங்கள்

அவரிடம் மிகவும் முதிர்ச்சியாக யாஷிகா ஆனந்த் நடந்து கொண்டவிதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே அவருக்கு கிடைத்தது. இதனால் பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

திட்டிய யாஷிகா

அவர் காட்டும் கவர்ச்சியால் மிரண்டு போன நெட்டிசன்கள் அவரை தமிழகத்தின் மியா காலிஃபா என்ற அழைத்தனர். இதனால் கடுப்பாகி நெட்டிசன்களை படு பயங்கரமாக கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்தார். ஆனாலும் தனது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை மட்டும் கைவிட வில்லை.

 செம ஸ்லிம்

செம ஸ்லிம்

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த், ஃபெமினா அட்டை படத்திற்காக கவர்ச்சி போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதில் வெள்ளை நிற ஷார்ட் டாப்ஸையும் நீண்ட பாவாடையையும் அணிந்துள்ளார். அதில் இடுப்பைக் காட்டி சொக்க வைத்துள்ளார் யாஷிகா. இந்த போட்டோவில் மிகவும் ஸ்லிம்மாக தெரிகிறார் யாஷிகா.

கவரே பண்ணல

கவரே பண்ணல

யாஷிகா ஆனந்த் தனது போட்டோவிற்கு கவர் ஷுட் ஃபார் ஃபெமினா என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் கவர் பண்ணவே இல்ல கவர் போட்டோ என்று சொல்கிறீர்களே என்று கேட்டு கலாய்த்துள்ளனர். மேலும் யாஷிகா ஆனந்தின் இந்த போட்டோவை பார்த்து, ஸ்டைல் குயின், ஹாட் க்யூட் என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

டிரெடிஷ்னல் ஷுட்

டிரெடிஷ்னல் ஷுட்

சிலர் உங்களின் டிரெஸ் எங்கே என்று கேட்டும் கிண்டலடித்துள்ளனர். யாஷிகா ஆனந்தின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. அவரது இந்த போட்டோவை இதுவரை 75 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இதேபோல் சிவப்பு நிற டிரெடிஷ்னல் உடையிலும் அசத்தலாய் போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார் யாஷிகா ஆனந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X