புதிய டாட்டூ குத்தியுள்ள நடிகை யாஷிகா ஆனந்த்... எங்கே என்ன டாட்டூ பாருங்க!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் புதியதாக குத்தி உள்ள டாட்டூ வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.
பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த யாஷிகா ஆனந்த் மாடலிங்கில் ஆர்வமுடையவராக இருந்தார்.

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா. அதன் பிறகு சந்தானத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
கிளுகிளுப்பான நடிகை: நடிகை யாஷிகா ஆனந்த்,கிளுகிளுப்பான உடைகளில் தூக்கலான அழகை காட்டி சோஷியல் மீடியாவில், தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவந்த இவர், இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.
கார் விபத்தில் சிக்கினார்: இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை கவர முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பிரபலமானார். தோழிகளுடன் ஜாலியாக காரில் சென்றபோது வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்பட்டு சில மாதங்கள் சிகிச்சை பெற்றார். இந்த விபத்தில் அவரது தோழி உயிரிழந்தார்.
கிடைத்த வேடத்தில்: இப்போது வழக்கம்போல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கிய யாஷிகா, திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது, ஒரு பாடலுக்கு நடனமாடுவது என கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறார். அண்மையில் இவர் எஸ். ஜே சூர்யாவுக்கு ஜோடியாக கடமையை செய் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
புதிய டாட்டூ: ஒருபக்கம் சினிமா வாய்ப்பை தேடி அலைந்தாலும், வழக்கம்போல் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், யாஷிகா ஆனந்த் புதிதாக டாட்டூ குத்தி உள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். கழுத்தில் கண் டாட்டூ ஒன்றை குத்தி உள்ளார். அந்த வீடியோவை பார்த்த பேன்ஸ் என்ன டாட்டூ அது என கேட்டு வருகின்றனர். அந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் பல லட்சம் லைக்குகளை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











