சண்டைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்ட நடிகை.. பேண்ட் கிழிந்த வீடியோவைபோட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த்தின் சண்டை பயிற்சி வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்திருக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கு முன்பே ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவரை பிரபலப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் அவருக்கு எதிர்பார்த்தப்படி பட வாய்ப்புகள் இல்லை. கிடைக்கும் பட வாய்ப்புகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதனால் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

நெட்டிசன்கள் கலாய்
அவரது கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாஷிகா ஆனந்த் வெளியிடும் போட்டோக்கள் கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சியாக உள்ளது. இதனால் நெட்டிசன்களின் கலாய்க்கு ஆளாகி வருகிறார் யாஷிகா ஆனந்த்.

சண்டை பயிற்சி வீடியோ
எவ்வளவு கலாய்த்தாலும் அசராத யாஷிகா, தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

எதிர்ப்பும் வரவேற்பும்
கறுப்பு நிற உடையில் செம கெத்தாக சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் யாஷிகா ஆனந்த். வழக்கம் போல யாஷிகா ஆனந்தின் இந்த வீடியோவுக்கும் எதிர்ப்பும் வரவேற்பும் எழுந்துள்ளது.
கலாய்க்கும் வீடியோ
குனிந்து நிமிர்ந்து, கால்களை தூக்கியும் உதைப்பது போன்ற பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் யாஷிகாவின் வீடியோவை கலாய்க்கும் வகையில், நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
வைரலாகும் வீடியோ
பெண் ஒருவர் கேட்டில் ஏறி எகிறி குதிக்கும் போது அவரது பேண்ட் கிழிவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். யாஷிகா ஆனந்தின் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











