Don't Miss!
- Finance
Gold: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இப்ப வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
- Lifestyle
மணமணக்கும்.. ருசியான... கனவா மீன் குழம்பு
- News
ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து நீக்கியாச்சு.. அவர் புதிதாக கட்சி தொடங்கியிருக்கிறார்.. தளவாய் சுந்தரம்
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
தம்பிராமைய்யாவின் ‘மணியார் குடும்பம்’... உமாபதியுடன் குத்தாட்டம் போட்ட ‘பிக்பாஸ்’ யாஷிகா!
Recommended Video

சென்னை: மணியார் குடும்பம் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்.
நடிகர் தம்பி ராமைய்யா தன் மகன் உமாபதியை நாயகனாக்கி, தானே கதை, திரைக்கதை எழுதி நடித்து, இசையமைத்து, இயக்கியுள்ள படம் மணியார் குடும்பம். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தில் உமாபதிக்கு ஜோடியாக மிருதுளா முரளி மற்றும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். யாஷிகா ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. முக்கிய வேடத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
காதல், ஆக்ஷன், காமெடி என முழுநீள என்டர்டெய்னராக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் தம்பி ராமையா. உமாபதியும் நடனம், காதல் காட்சிகள், சண்டை என தன் பங்கிற்கு சிறப்பாகவே செய்திருப்பது டிரெய்லரிலேயே தெரிகிறது.
தமிழில் முரளி நடித்த 'மனுநீதி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான தம்பி ராமையா, வடிவேலுவை வைத்து 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தையும் இயக்கியுள்ளார். பிறகு தொடர்ந்து படங்கள் இயக்காமல் குணச்சித்திரம், காமெடி என நடிப்பில் கவனம் செலுத்திய அவர், 'மைனா' படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது மீண்டும் தன் மகன் உமாபதிக்காக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
முன்னதாக இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது நினைவு கூரத்தக்கது.