இரண்டு காலிலும் பெரிய கட்டு… யாஷிகாவின் பரிதாபநிலை… கலங்கும் ரசிகர்கள் !

சென்னை : நடிகை யாஷிகா ஆனந்த் காலில் மிகப்பெரிய கட்டுடன், மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் போட்டோவை வெளியிட்டார்.

ஜூலை மாதம் மிகப்பெரிய விபத்தில் சிக்கிய யாஷிகாவுக்கு இடுப்பு, கால், கை என பல இடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது யாஷிகாவின் உடல் நிலை மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறது. அவர் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

பஞ்சாபை சேர்ந்த மாடலான யாஷிகா ஆனந்த், தமிழில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் கை வசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.

கார் விபத்து

கார் விபத்து

யாஷிகா ஜூலை 25ந் தேதி தனது நண்பர்களுடன் காரில் பாண்டிச்சேரி ரிசார்ட்டில் நள்ளிரவு பார்ட்டிக்கு சென்றிருந்தார். இந்த பார்ட்டியை முடித்து விட்டு மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சூலேறிக்காடு அருகே வந்து கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது. இடித்த வேகத்தில் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

அலறல் சத்தம்

அலறல் சத்தம்

இந்த கோர விபத்து நிகழ்ந்தது நள்ளிரவு 1 மணி என்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டமானது குறைவாகவே இருந்தது. இதையடுத்து, அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

தோழி உயிரிழந்தார்

தோழி உயிரிழந்தார்

ஓட்டுநருக்கு இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் ஹைதராபாத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

3 பிரிவுகளில் வழக்கு

3 பிரிவுகளில் வழக்கு

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், மோசமாக கார் ஓட்டி, உயிரிழப்பு ஏற்படுத்தியதாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது 279, 337, 304 என மூன்று பிரிவின்ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

யாஷிகாவின் புதிய புகைப்படம்

யாஷிகாவின் புதிய புகைப்படம்

இந்த விபத்தில் விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகாவிற்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. யாஷிகாவின் உடல் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. யாஷிக்கா தற்போது மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் யாஷிகா காலில் பெரிய கட்டுடன் பெட்டில் படுத்து இருக்கிறார். மேலும் அவருக்கு யூரியன் ட்யூப் பொருத்தப்பட்டுள்ளது. யாஷிகாவின் தாயார் மற்றும் அவரது செல்லப்பிராணி என மூவரும் இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை யாஷிக்காவின் ரசிகர்கள் வைரலாக்கி வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X