Yashikaa Anand: இறந்த தோழிக்கு உதட்டிலேயே முத்தம் கொடுத்திருக்கும் யாஷிகா ஆனந்த்.. இன்ஸ்டாகிராமில் குமுறல்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறியப்படுகிறார். இவர் ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றாலே கிளாமருக்குத்தான் இவரை கமிட் செய்கிறார்கள் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இயல்பாகவே எழுந்துவிடுகிறது. இப்படி இருக்கும்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
யாஷிகா ஆனந்த் கடந்த 2021ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தபோது கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அந்த கார் விபத்தில் அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமானார். தற்போது சினிமாக்களில் நடித்தும் வருகிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விபத்தில் தனது தோழியை இழந்தது தொடர்பாக யாஷிகா ஆனந்த் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தனது தோழியுடன் முன்னர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் யாஷிகா அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.

யாஷிகா ஆனந்த் எமோஷனல்: அவரது பதிவில், " நான்கு வருடங்கள் கடந்துவிட்டன, ஆனால் உனது இழப்பு இன்னும் புதிதாகவே வலிக்கிறது. ஒவ்வொரு நாளும் நீ இங்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போராடுகிறேன். நேரம் காயங்களை குணப்படுத்தும் என்கிறார்கள், ஆனால் உன்னை இழந்த வலி கொஞ்சமும் குறையவில்லை. மாறாக, அது என் இதயத்தில் நிலையான வலியாக மாறிவிட்டது. நாம் ஒன்றாக இருந்த நினைவுகளில் சிக்கிக்கொண்டு, அவற்றை மீண்டும் மீண்டும் நினைத்து, நீ இங்கு இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பாய், என்ன செய்திருப்பாய் என கற்பனை செய்து பார்க்கிறேன்.
தொலைதூர கனவு: வாழ்க்கை ஒரு கொடூரமான விளையாட்டு போல உணரவைக்கிறது. உனது இடைவிடாத பேச்சுகள், உனது சிரிப்பு, என்னை எப்போதும் சிரிக்க வைத்த உனது பதில்கள், எல்லாமே இப்போது தொலைதூர கனவு போல மாறிவிட்டது. நீ இன்னும் இங்கு இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து நான் உருகுகிறேன். பவ், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன், என் வருத்தத்தின் பாரம் என்னை நசுக்குகிறது. முடிந்தால் காலத்தை திருப்பி, அந்த விபத்து நடக்காதபடி எல்லாவற்றையும் சரி செய்ய விரும்புகிறேன். 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற உதவியதில் தொடங்கிய தொடங்கி, நீ என் வாழ்க்கையை எண்ணற்ற வழிகளில் செழுமை ஆக்கினாய்.
துக்கம்: நான் வளர்ந்ததை நீ பார்த்தாய், உனது தனித்துவமான பிரகாசத்தை நான் கண்டேன். இப்போது, இந்த நினைவுகளும், உன்னை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற தீவிர ஏக்கமும் மட்டுமே என்னிடம் உள்ளன. உனது ஆன்மா அமைதி அடைய வேண்டி பிரார்த்திக்கிறேன், எப்படியாவது, ஏதோவொரு வழியில் நாம் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையை பிடித்துக் கொண்டிருக்கிறேன். அதுவரை, உனது குரல், உனது சிரிப்பு, அந்த அழகிய 'பூகி போஸ்கள்' என்னை துரத்தி, நான் இழந்தவற்றை நினைவூட்டுகின்றன. ஸ்கூபி டூபி டூ, பவ் - உனது இருப்பு இன்னும் என் இதயத்தில் எதிரொலிக்கிறது, அதுவரை உனது நினைவுகளுடன் இங்கு இருக்கிறேன், துக்கத்துடனும் குணமடைந்து கொண்டிருக்கிறேன்.

ரசிகர்கள் ஆறுதல்: பவ், உன்னை 3000 மடங்கு உன்னை நேசிக்கிறேன். மறு பிறவியில் சந்திப்போம். ஏஞ்சல் என பதிவு செய்துள்ள உனது எண்கள் மூலம் உன்னிடமிருந்து செய்தி வரும் என்று இன்னும் காத்திருக்கிறேன். பின் குறிப்பு - இன்றும் உனக்காக பிரார்த்தனை செய்தபோது, 10வது ஸ்லைடில் குறிப்பிட்டபடி, தாமரை வைத்தவுடன் மழை பெய்யத் தொடங்கியது" எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் மனதில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் சிலர் இவ்வளவு நெருக்கமான தோழியை இழந்தால் யாருக்குத்தான் வலிக்காது என பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











