ஐந்து நிமிடங்களில் என்ன ஆகிடப்போகுது.. அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ஓபனாக பேசிய நடிகை
சென்னை: கடந்த சில காலமாகவே அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகைகள் ஓபனாக பேசிவருகின்றனர். அவர்கள் பேசுவது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்க்கும். அந்தவகையில் தற்போது நடிகை யாழினியும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருக்கிறார். இவர் சில சீரியல்களிலும், படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பேசியது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இப்போதைய காலம்வரை அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை பெண்களுக்கு தீர்ந்தபாடில்லை.

ஹீரோயின்களின் ஓபன் டாக்ஸ்: அட்ஜெட்ஸ்ட்மெண்ட்டால் தாங்கள் சந்திக்கும் கொடுமை குறித்து நடிகைகள் வெளியில் பேசுவது அரிதிலும் அரிதுதான். ஆனால் சமீபகாலமாக தைரியமாக அனைத்தையும் பேசிவருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கான அப்ரோச் போயிருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார்.
வாரிசு நடிகையிடமும்: அதேபோல் சினிமாவில் வாரிசு நடிகையாக அறியப்படும் வரலட்சுமியிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் நடந்திருக்கிறது. தந்தை சினிமாவில் இருந்தும்கூட வரலட்சுமியிடம் இப்படி அப்ரோச் போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜெட்ஸ்ட்மெண்ட் அப்ரோச் குறித்து ஓபனாக பேசிவருகிறார்கள்.
யாழினி பேட்டி: இந்நிலையில் நடிகை யாழினி பேசுகையில், "அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னையால்தான் பெண்கள் சினிமாவுக்கு போகக்கூடாதுனு சொல்வார்கள். தவறான ஃபீல்ட் இது இல்லை. அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயம் எல்லா ஃபீல்டிலும் இருக்கிறது. ஒரு இடத்துக்கு போகும்போது அங்கு நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். என்னையும் அட்ஜெஸ்ட் செய்ய சொல்லி கேட்டிருக்கிறார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
அந்த 5 நிமிடங்கள்: அதனை செய்தால்தான் வாய்ப்பு கிடைக்க வேண்டுமா. அந்த ஐந்து நிமிடங்களில் என்ன கிடைக்கப்போகிறது. ஒன்றும் கிடையாது. ஆனால் அதையே செய்ய சொல்கிறார்கள். நாங்கள் ஆசைக்காக கஷ்டப்பட்டு இந்தத் துறையில் நடிக்க வருகிறோம். பிறகு ஏன் அட்ஜெஸ்ட் செய்ய சொல்கிறார்கள். கேமராமேன், இயக்குநர், தயாரிப்பாளர் என பலரும் கேட்கிறார்கள். நான் அட்ஜெஸ்ட் செய்யமாட்டேன் என்றதால் என்னுடைய சீன்களை படத்திலிருந்து எல்லாம் தூக்கியிருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











