»   »  வறட்சியில் மல்லுவுட்! ஹீரோயின்கள் இல்லாமல் பெரும் வறட்சியில் சிக்கியுள்ளது மல்லுவுட் எனஅழைக்கப்படும் மலையாளத் திரையுலகம்.ஏற்கனவே நம்ம ஊருக்கும், அவய்ங்க ஊருக்கும் வாய்க்காப் பிரச்சினை இருக்கு,இது புதுசா இந்தப் பிரச்சினை வேறயா? என்று ஒரு படத்தில் வடிவேலுவைப் பார்த்துசங்கிலி முருகன் கடுப்பாக கேட்பார். அது மாதிரியான ஒரு சிக்கலில் இப்போதுமல்லுவுட் இருக்கிறது.இரு மாநிலங்களுக்கும் இடையே பெரியாறு அணை பிரச்னை ஒரு பக்கம்இருந்தாலும் மலையாள நடிகைகள் கோலிவுட்டில் நல்லபடியாக மகசூல் பார்த்துவருகின்றனர்.மலையாளத்தின் முன்னணி நடிகைகள் எல்லாம் தமிழுக்குத் தாவி விட்டதால் அங்குநல்ல நடிகைகளுக்கு பெரும் பற்றாக்குறை இருந்து வருகிறது.அதை விடக் கொடுமையாக, அங்கே கவர்ச்சி காட்ட ரொம்ப தெனாவெட்டு காட்டும்நடிகைகள் அத்தனை பேரும் தமிழில் ரண்டக்க, ரண்டக்க என்று கிளாமரில் குண்டக்கமண்டக்க தூள் கிளப்பி வருகின்றனர்.இதனால் மலையாள திரையுலகினர் அடி வயிறு எரிந்து கொண்டிருக்கிறார்கள்.இதில், விரல் விட்டும் எண்ணும் அளவுக்குத்தான் அங்கு முன்னணி ஹீரோயின்கள்தங்கி இருப்பதால் அவர்களை வைத்தே அத்தனை படங்களையும் சுட்டுத் தள்ளும்துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.புதுசா யாரையாவது அறிமுகப்படுத்தலாம் என்று பார்த்தால் அறிமுகமான படத்தில்நடித்து விட்டு அடுத்த வண்டியைப் பிடித்து சென்னைக்கு ஓடிவிடுகிறார்கள் எனமலையாள தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள்.இப்போதைக்கு மலையாளத்தில் முன்னணியில் உள்ள நடிகைகள் என்று பார்த்தால்காவ்யா மாதவன், மதமத மம்தா, குளுகுளு கோபிகா ஆகியோர் மட்டுமே.இவர்கள் தவிர சில ஷேபனா போன்ற மூத்த நடிகைகளும் சில குட்டி நடிகைகளும்மலையாளப் பிட் பட நடிகைகளும் மட்டுமே இருக்கிறார்கள்.சித்திரம் பேசுதடி படம் வருவதற்கு முன்பு வரை பளபள பாவ்னாவும், லீடிங்லிஸ்ட்டில்தான் இருந்தார். சித்திரம் பேசுதடி ஹிட் ஆகி விட்டதால் அவரும்சென்னையிலேயே டேரா போட்டுவிட்டார்.காவ்யா மாதவன்தான் இப்போது மலையாளத்தில் நம்பர் ஒன் நடிகை என்கிறார்கள்.அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் அவர் ரவுண்டு அடித்து வருகிறார். குட்டிநடிகர்களுடனும் நடித்து வருகிறார்.அவருக்கு அடுத்து மம்தா தான் பிசியான நடிகையாக உள்ளார். ஆனால் தமிழுக்கும்தாவ அவர் சரியான வாய்ப்புக்காக காத்துள்ளார்.கோபிகாவையும் நம்ப முடியாது என்கிறார்கள். தமிழில் சயான வாய்ப்புஇல்லாததால்தான் அவர் மலையாளத்தில் நடித்து வருகிறார். வசமான வாய்ப்புசிக்கினால் உடனே ஓடிப் போய் விடுவார் என்று பப்ளிக்காகவே கூறுகிறார்கள்.இவர்கள் தவிர நவ்யா நாயரும் முன்பு நிறைய மலையாளப் படங்களில் நடித்துவந்தார். ஆனால் அவரையும் கோலிவுட் ஹைஜாக் செய்து விட்டது. இப்போதுசேரனுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.இதுதவிர மேலும் சில படங்கள் புக் ஆகியுள்ளதால் இப்போதைக்கு நவ்யாகேரளாவுக்குத் திரும்ப மாட்டார் என்கிறார்கள்.ஏற்கனவே ஆசின், நயனதாரா என ஏகப்பட்ட கழக முன்னோடிகள், தமிழுக்கு ஓடிவந்து விட்டார்கள். ரேணுகா மேனனும் இங்கேயே செட்டிலாகி விட்டார்.இவர் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவர் மீண்டும் மலையாளப்பக்கம் போக மாட்டார் என்கிறார்கள். அந்த அளவுக்கு மலையாளத்தயாரிப்பாளர்களை கடுப்படித்து விட்டார்.இப்படி அத்தனை நடிகைகளும் தமிழுக்கும், தெலுங்குக்குமாக ஓடிப்போய்விட்டதால் இருப்பதை வைத்து வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம்மலையாள திரைலயுலகினர்.என்டே இது...

வறட்சியில் மல்லுவுட்! ஹீரோயின்கள் இல்லாமல் பெரும் வறட்சியில் சிக்கியுள்ளது மல்லுவுட் எனஅழைக்கப்படும் மலையாளத் திரையுலகம்.ஏற்கனவே நம்ம ஊருக்கும், அவய்ங்க ஊருக்கும் வாய்க்காப் பிரச்சினை இருக்கு,இது புதுசா இந்தப் பிரச்சினை வேறயா? என்று ஒரு படத்தில் வடிவேலுவைப் பார்த்துசங்கிலி முருகன் கடுப்பாக கேட்பார். அது மாதிரியான ஒரு சிக்கலில் இப்போதுமல்லுவுட் இருக்கிறது.இரு மாநிலங்களுக்கும் இடையே பெரியாறு அணை பிரச்னை ஒரு பக்கம்இருந்தாலும் மலையாள நடிகைகள் கோலிவுட்டில் நல்லபடியாக மகசூல் பார்த்துவருகின்றனர்.மலையாளத்தின் முன்னணி நடிகைகள் எல்லாம் தமிழுக்குத் தாவி விட்டதால் அங்குநல்ல நடிகைகளுக்கு பெரும் பற்றாக்குறை இருந்து வருகிறது.அதை விடக் கொடுமையாக, அங்கே கவர்ச்சி காட்ட ரொம்ப தெனாவெட்டு காட்டும்நடிகைகள் அத்தனை பேரும் தமிழில் ரண்டக்க, ரண்டக்க என்று கிளாமரில் குண்டக்கமண்டக்க தூள் கிளப்பி வருகின்றனர்.இதனால் மலையாள திரையுலகினர் அடி வயிறு எரிந்து கொண்டிருக்கிறார்கள்.இதில், விரல் விட்டும் எண்ணும் அளவுக்குத்தான் அங்கு முன்னணி ஹீரோயின்கள்தங்கி இருப்பதால் அவர்களை வைத்தே அத்தனை படங்களையும் சுட்டுத் தள்ளும்துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.புதுசா யாரையாவது அறிமுகப்படுத்தலாம் என்று பார்த்தால் அறிமுகமான படத்தில்நடித்து விட்டு அடுத்த வண்டியைப் பிடித்து சென்னைக்கு ஓடிவிடுகிறார்கள் எனமலையாள தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள்.இப்போதைக்கு மலையாளத்தில் முன்னணியில் உள்ள நடிகைகள் என்று பார்த்தால்காவ்யா மாதவன், மதமத மம்தா, குளுகுளு கோபிகா ஆகியோர் மட்டுமே.இவர்கள் தவிர சில ஷேபனா போன்ற மூத்த நடிகைகளும் சில குட்டி நடிகைகளும்மலையாளப் பிட் பட நடிகைகளும் மட்டுமே இருக்கிறார்கள்.சித்திரம் பேசுதடி படம் வருவதற்கு முன்பு வரை பளபள பாவ்னாவும், லீடிங்லிஸ்ட்டில்தான் இருந்தார். சித்திரம் பேசுதடி ஹிட் ஆகி விட்டதால் அவரும்சென்னையிலேயே டேரா போட்டுவிட்டார்.காவ்யா மாதவன்தான் இப்போது மலையாளத்தில் நம்பர் ஒன் நடிகை என்கிறார்கள்.அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் அவர் ரவுண்டு அடித்து வருகிறார். குட்டிநடிகர்களுடனும் நடித்து வருகிறார்.அவருக்கு அடுத்து மம்தா தான் பிசியான நடிகையாக உள்ளார். ஆனால் தமிழுக்கும்தாவ அவர் சரியான வாய்ப்புக்காக காத்துள்ளார்.கோபிகாவையும் நம்ப முடியாது என்கிறார்கள். தமிழில் சயான வாய்ப்புஇல்லாததால்தான் அவர் மலையாளத்தில் நடித்து வருகிறார். வசமான வாய்ப்புசிக்கினால் உடனே ஓடிப் போய் விடுவார் என்று பப்ளிக்காகவே கூறுகிறார்கள்.இவர்கள் தவிர நவ்யா நாயரும் முன்பு நிறைய மலையாளப் படங்களில் நடித்துவந்தார். ஆனால் அவரையும் கோலிவுட் ஹைஜாக் செய்து விட்டது. இப்போதுசேரனுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.இதுதவிர மேலும் சில படங்கள் புக் ஆகியுள்ளதால் இப்போதைக்கு நவ்யாகேரளாவுக்குத் திரும்ப மாட்டார் என்கிறார்கள்.ஏற்கனவே ஆசின், நயனதாரா என ஏகப்பட்ட கழக முன்னோடிகள், தமிழுக்கு ஓடிவந்து விட்டார்கள். ரேணுகா மேனனும் இங்கேயே செட்டிலாகி விட்டார்.இவர் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவர் மீண்டும் மலையாளப்பக்கம் போக மாட்டார் என்கிறார்கள். அந்த அளவுக்கு மலையாளத்தயாரிப்பாளர்களை கடுப்படித்து விட்டார்.இப்படி அத்தனை நடிகைகளும் தமிழுக்கும், தெலுங்குக்குமாக ஓடிப்போய்விட்டதால் இருப்பதை வைத்து வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம்மலையாள திரைலயுலகினர்.என்டே இது...

By Staff
Subscribe to Oneindia Tamil

ஹீரோயின்கள் இல்லாமல் பெரும் வறட்சியில் சிக்கியுள்ளது மல்லுவுட் எனஅழைக்கப்படும் மலையாளத் திரையுலகம்.

ஏற்கனவே நம்ம ஊருக்கும், அவய்ங்க ஊருக்கும் வாய்க்காப் பிரச்சினை இருக்கு,இது புதுசா இந்தப் பிரச்சினை வேறயா? என்று ஒரு படத்தில் வடிவேலுவைப் பார்த்துசங்கிலி முருகன் கடுப்பாக கேட்பார். அது மாதிரியான ஒரு சிக்கலில் இப்போதுமல்லுவுட் இருக்கிறது.

இரு மாநிலங்களுக்கும் இடையே பெரியாறு அணை பிரச்னை ஒரு பக்கம்இருந்தாலும் மலையாள நடிகைகள் கோலிவுட்டில் நல்லபடியாக மகசூல் பார்த்துவருகின்றனர்.


மலையாளத்தின் முன்னணி நடிகைகள் எல்லாம் தமிழுக்குத் தாவி விட்டதால் அங்குநல்ல நடிகைகளுக்கு பெரும் பற்றாக்குறை இருந்து வருகிறது.

அதை விடக் கொடுமையாக, அங்கே கவர்ச்சி காட்ட ரொம்ப தெனாவெட்டு காட்டும்நடிகைகள் அத்தனை பேரும் தமிழில் ரண்டக்க, ரண்டக்க என்று கிளாமரில் குண்டக்கமண்டக்க தூள் கிளப்பி வருகின்றனர்.

இதனால் மலையாள திரையுலகினர் அடி வயிறு எரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இதில், விரல் விட்டும் எண்ணும் அளவுக்குத்தான் அங்கு முன்னணி ஹீரோயின்கள்தங்கி இருப்பதால் அவர்களை வைத்தே அத்தனை படங்களையும் சுட்டுத் தள்ளும்துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.


புதுசா யாரையாவது அறிமுகப்படுத்தலாம் என்று பார்த்தால் அறிமுகமான படத்தில்நடித்து விட்டு அடுத்த வண்டியைப் பிடித்து சென்னைக்கு ஓடிவிடுகிறார்கள் எனமலையாள தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள்.

இப்போதைக்கு மலையாளத்தில் முன்னணியில் உள்ள நடிகைகள் என்று பார்த்தால்காவ்யா மாதவன், மதமத மம்தா, குளுகுளு கோபிகா ஆகியோர் மட்டுமே.

இவர்கள் தவிர சில ஷேபனா போன்ற மூத்த நடிகைகளும் சில குட்டி நடிகைகளும்மலையாளப் பிட் பட நடிகைகளும் மட்டுமே இருக்கிறார்கள்.

சித்திரம் பேசுதடி படம் வருவதற்கு முன்பு வரை பளபள பாவ்னாவும், லீடிங்லிஸ்ட்டில்தான் இருந்தார். சித்திரம் பேசுதடி ஹிட் ஆகி விட்டதால் அவரும்சென்னையிலேயே டேரா போட்டுவிட்டார்.


காவ்யா மாதவன்தான் இப்போது மலையாளத்தில் நம்பர் ஒன் நடிகை என்கிறார்கள்.அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் அவர் ரவுண்டு அடித்து வருகிறார். குட்டிநடிகர்களுடனும் நடித்து வருகிறார்.

அவருக்கு அடுத்து மம்தா தான் பிசியான நடிகையாக உள்ளார். ஆனால் தமிழுக்கும்தாவ அவர் சரியான வாய்ப்புக்காக காத்துள்ளார்.

கோபிகாவையும் நம்ப முடியாது என்கிறார்கள். தமிழில் சயான வாய்ப்புஇல்லாததால்தான் அவர் மலையாளத்தில் நடித்து வருகிறார். வசமான வாய்ப்புசிக்கினால் உடனே ஓடிப் போய் விடுவார் என்று பப்ளிக்காகவே கூறுகிறார்கள்.

இவர்கள் தவிர நவ்யா நாயரும் முன்பு நிறைய மலையாளப் படங்களில் நடித்துவந்தார். ஆனால் அவரையும் கோலிவுட் ஹைஜாக் செய்து விட்டது. இப்போதுசேரனுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.


இதுதவிர மேலும் சில படங்கள் புக் ஆகியுள்ளதால் இப்போதைக்கு நவ்யாகேரளாவுக்குத் திரும்ப மாட்டார் என்கிறார்கள்.

ஏற்கனவே ஆசின், நயனதாரா என ஏகப்பட்ட கழக முன்னோடிகள், தமிழுக்கு ஓடிவந்து விட்டார்கள். ரேணுகா மேனனும் இங்கேயே செட்டிலாகி விட்டார்.

இவர் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவர் மீண்டும் மலையாளப்பக்கம் போக மாட்டார் என்கிறார்கள். அந்த அளவுக்கு மலையாளத்தயாரிப்பாளர்களை கடுப்படித்து விட்டார்.


இப்படி அத்தனை நடிகைகளும் தமிழுக்கும், தெலுங்குக்குமாக ஓடிப்போய்விட்டதால் இருப்பதை வைத்து வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம்மலையாள திரைலயுலகினர்.

என்டே இது...

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more